Spellbound

வீட்டை கட்ட சொன்னால் அரண்மனையை கட்டி வைத்திருக்கும் தனுஷ்! மாமனாரை விஞ்ச விருப்பமா? இடம் மட்டுமே, 70 கோடி எட்டு கிரவுண்ட்!

Jun 26 2021 11:03:00 AM

நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு வருமான வரி கட்ட சொன்னால், அதனை தயாரிப்பாளர் தலையில் கட்டி விடுகிறார்கள். ஆனால் இவர்கள் வாங்கும் ஊதியத்திற்கு வீடுகளை கட்டி குவித்து வருகிறார்கள். தவறு! வீடு இல்லை அரண்மனை கட்டி வருகிறார்கள். நடுத்தர குடும்பங்கள் 2 சென்ட் இடம் வாங்கி வீடு கட்டவே, வாழ்க்கை முழுக்க வங்கிக்கு கப்பம் கட்டிக்கொண்டு இருக்க வேண்டியுள்ளது. ஆனால் சில முதலாளி வர்க்கம் ஆயிரம் கோடி பணத்தை சுருட்டி கொண்டு வெளிநாட்டில் நிம்மதியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இரண்டு லட்சம் மூன்று லட்சம் கடனை வாங்கி கொண்டு நடுத்தர குடும்பங்களும் விவசாய குடும்பங்களும் தற்கொ*லை செய்து கொண்டு இருக்கிறார்கள். 

vijai-sethupathi-family dhanush-family

இதற்கு எந்த டாப்பிக்? விஷயத்திற்கு வருவோம். சமீபத்தில் பல நடிகர்கள் புதிதாக அரண்மனை வீடுகளை கட்டியுள்ளார்கள். அது பற்றிய விபரங்களை தான் பார்க்க போகிறோம். நடிகர் தனுஷ் இரவு பகல் பார்க்காமல் படங்களில் நடித்து வருகிறார். ஏன் தெரியுமா? போயஸ் கார்டனில் 150 கோடிக்கு மேல் முதலீடு போட்டு வீடு கட்ட உள்ளாராம். இடம் மட்டுமே 70 கோடியாம். மற்றபடி கட்டுமான செலவு 80 கோடியாம். இடம் மட்டுமே எட்டு க்ரவுண்ட் வருமாம். தனது மாமனார் வீடு போலவே பெரிய அரண்மனை போல வீடு கட்டி வருகிறாராம்.

vijai-sethupathi-family dhanush-family

அடுத்து நடிகர் சூர்யா டி நகரில் எட்டு க்ரவுண்டில் நாலு மாடிக்கு வீடு கட்டி வருகிறாராம். அவர்களது வீட்டில் மொத்தம் நான்கு குடும்பங்கள் தானே? அதனால் தான் நான்கு மாடியோ? அவர்களது குடும்பம் கூட்டு குடும்பம் இல்லையா? அதனால் தான் இவ்வளவு பெரிய வீடாம். வீட்டிற்குள்ளே நீச்சல் குளம், பெரிய தோட்டம் என வீடே குட்டி தெரு போல இருக்குமாம். எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் வீட்டில் ஒரே சமையலறை மற்றும் ஒரே டைனிங் ஹால் தானாம். இது கண்டிப்பாக பாராட்ட வேண்டிய விஷயம். 

vijai-sethupathi-family dhanush-family

அடுத்து விஜய் சேதுபதியும் சேத்துப்பட்டில் பெரிய பேலஸ் கட்டி வருகிறாராம். அதனால் தான் ஹீரோ, வில்லன், வேற்றுமொழிகளில் கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி வருகிறாராம். ஒரு சாமானியனின் வாழ்க்கையில் ஒரு வீடு கட்டுவது என்பதே பெரிய சாதனை. ஆனால் இங்கு ஹீரோக்கள் அரண்மனைக்கு மேல் அரண்மனையாக கட்டி வருகிறார்கள்.