Misc

இந்தப் பொருட்களை தானம் செய்தாலே போதும், உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்தோடும்! என்ன தானம் செய்தால் என்ன பலன் தெரியுமா?

Jan 13 2022 07:49:00 PM

நாம் செய்யும் தானமும் தர்மமும் நம் தலையை காக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமாஏதாவது ஒரு பலனை எதிர்பார்த்து அடுத்தவர்களுக்கு செய்வது தானம்எதையுமே எதிர்பார்க்காமல் இல்லாதவர்களுக்கு நாம் மனதார உதவி செய்வது தர்மம்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு நாம் செய்யக்கூடிய தர்மத்தின் புண்ணியமானது நமக்கு மட்டுமல்ல நம்முடைய சந்ததியினரையும் சேரும். அதிலும் குறிப்பாக சில பொருட்களை தானம் செய்யும்போது கஷ்டத்தில் இருக்கும் குடும்பத்திற்கு கஷ்டம் விலகி நல்லது நடக்கும்.

dhaanam dharmam benefits

பச்சரிசி, வெல்லம், நல்லெண்ணெய், துவரம் பருப்பு, தேங்காய் போன்ற பொருட்களை தர்மம் செய்வது மிகவும் சிறந்தது. நாம் தானம், தர்மம் கொடுக்கக்கூடிய அளவு என்பது நம்முடைய வசதியை பொருத்தது. எவ்வளவு ரூபாய்க்கு இந்த பொருட்களை வாங்க முடியுமோ அவ்வளவு வாங்கி அதை எத்தனை பேருக்குக் கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கும் கொடுக்கலாம். மாதம் ஒருமுறை வாரம் ஒருமுறை கூட இந்தப் பொருட்களை இல்லாதவர்களுக்கு தானம் கொடுத்து வரலாம்.

dhaanam dharmam benefits

வருமானம் இன்றி கஷ்டத்தில் இருப்பவர்கள் தங்களின் வறுமையை எண்ணி தானம் கொடுக்காமல் இருக்க வேண்டாம். இருக்கும்போது செய்யும் தானத்தை விட இல்லாதபோது கஷ்டப்பட்டாவது தானம் கொடுப்பதில் தான் அதிக பலன் கிடைக்கும். பணத்திற்காக கஷ்டப்படுபவர்கள் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு ஏதாவது ஒரு வகையில் பணத்தை சம்பாதித்து மாதத்தில் ஒருநாள் நம்மை விட கஷ்டப்படும் ஒரு ஏழைக்கு  தானம் கொடுப்பது சிறந்தது .

பச்சரிசி சந்திரனுக்குரிய பொருள். இதை தானமாகக் கொடுக்கும் போது நம் வீட்டில் இருப்பவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும். அறிவுத்திறன் மங்கி போகாது. எதை செய்தாலும் திறமையுடன் செயல்பட்டு அதில் வெற்றி காண்பார்கள்.

dhaanam dharmam benefits

வெள்ளம் இனிப்பானது. இது சுக்கிரனுக்கு உகந்தது. மகாலட்சுமி வாசம் செய்ய கூடிய வெள்ளத்தை தானம் கொடுப்பதன் மூலம் தன தானியம் வீட்டில் நிறைவாக இருக்கும். பொன் பொருள் சேர்க்கையும் அதிகரிக்கும்.

எண்ணெய் சனி பகவானுக்கு உரியது. சனி பகவானின் ஆசீர்வாதத்தை பெற்று விட்டாலே வாழ்க்கையில் இருக்கும் இன்னல்கள் அனைத்தும் சரியாகிவிடும்.

dhaanam dharmam benefits

துவரம்பருப்பு செவ்வாய் பகவானுக்கு உரியது. ஒட்டுமொத்த நிலம், வீட்டையும் குறிப்பது. வீடு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினையாக இருந்தாலும் துவரம்பருப்பை தானம் செய்வதன் மூலம் சரியாகிவிடும். தேங்காயானது தென்னை மரம் போல உங்களுடைய வாழ்வு வளமாக உயரவேண்டும் என்பதற்காக தானமாக கொடுக்கப்படுகிறது.