HotPicks

சிலிண்டர் இரசீதில் உள்ளதை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாகப் பெற கூடாது என்பது உங்களுக்கு தெரியுமா? எத்தனை முறை ஏமாந்து இருக்கீங்க?

Nov 21 2020 06:17:00 PM

செய்யும் வேலைக்கு மனமுவந்து டிப்ஸ் தருவது தவறல்ல. ஆனால் அதனை கொடுத்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்துவது தவறுதானே? சிலிண்டரின் டெலிவரி விலையையே கடன் வாங்கிக் கொடுப்பவர்கள் பலர் இன்றும் இருக்கிறார்கள். அவர்களிடம் டெலிவரிக்கு இருபது ரூபாயோ ஐம்பது ரூபாயோ கூடுதலாக கேட்பது எந்த விதத்தில் நியாயம்? அதைக் கொடுக்க முடியாதவர்களை, சிலிண்டர் போடும் டெலிவரி ஆட்கள் ஏளனப் பார்ப்பதை எப்படி எடுத்துக்கொள்வது?

cylinder delivery delivery-boy

எங்க ஊருக்கு சிலிண்டர் டெலிவரி செய்யும் ஆட்களுக்கு எல்லாம் மனதில் ஜில்லா கலெக்டர் நினைப்பு. ஒரு தடவை எதிர்கேள்வி கேட்டுவிட்டால் போதும், சிலிண்டர் டெலிவரிக்கு வரும் போது வீடு பூட்டியிருந்தது என்று சொல்லி, காலம் தாமதம் செய்வார்கள். இவர்களை இப்படியே விட்டா ஆகாது. ஏதாவது செய்தாக வேண்டுமென மனம் உறுத்தியது. ஒருமுறை சிலிண்டர் ஆன்லைனில் புக் செய்ததோடு மட்டுமல்லாது, அதற்கான தொகையையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டேன். வழக்கம் போல வீட்டுக்கு வந்தாங்க, டெலிவரி செய்த பிறகு, டெலிவரி சார்ஜ் ஐம்பது ரூபாய் கொடுக்க வேண்டும் என்றனர்.

cylinder delivery delivery-boy

பில் தொகைக்கு மேல் ஒரு பைசா கூட அதிகம் தர மாட்டேன் என்றேன். உடனே அலுவலகத்திற்கு போன் போட்டு ஏதோ பேச, நீ பேசு ராசா, தலைகீழா நின்னாலும் நயா பைசா கூட தரமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆபீசில் இருந்து எனக்கு போன் வந்தது, கேட்கும் தொகையை கொடுக்க சொன்னாங்க. உடனே நான், "அப்படி எல்லாம் தர முடியாது, பில் தொகைக்கு மேல் ஒரு பைசா கூட அதிகம் வாங்கக்கூடாதுன்னு விதி இருக்கே, அது உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டேன். உடனே டெலிவரி ஆட்களுக்கு போன் போனது. என்ன சொன்னாங்கனு தெரியல. சிலிண்டரை ஆட்டோவில் இருந்து தூக்கி கீழே போட்டுவிட்டு, அடுத்த முறை வீட்டுக்கு சிலிண்டர் வராது என கத்திக்கொண்டே சென்றனர்.

cylinder delivery delivery-boy

நடந்த சம்பவம் குறித்து உடனே ஆன்லைனில் புகார் தெரிவித்தேன். புகார் அளித்த மூன்று மணி நேரத்தில், சிலிண்டர் டிஸ்ட்ரிபியூட்டர் அலுவலகத்தில் இருந்து இரண்டு பேர் வீட்டுக்கு வந்து, டெலிவரி ஆட்கள் மீது தான் தவறு. நீங்கள் கொடுத்த புகாரால் எங்கள் கிளைக்கு பெரிய பிரச்சனை. தயவு செய்து, கொடுத்த புகார் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டதாக ஒரு லெட்டர் எழுதி கையெழுத்து போட்டுத்தாங்க என கெஞ்சினர். ஆன்லைன் புகாருக்கு இவ்வளவு பவர் இருக்கிறதா என்பதையே அப்போது தான் உணர்ந்துகொண்டேன். நாமே விருப்பப்பட்டு கொடுத்தால் வாங்கிக்கணும். யாராவது கொடுக்க சொல்லி அதிகாரம் செய்தால், எதிர்த்து கேள்வி கேளுங்கள். கேட்க ஆள் இல்லை என்பதால் தான் இவ்வளவு நாள் ஆட்டம் அதிகமாகவே இருந்திருக்கிறது.