Around me

பீட்சா டாப்பிங்காக க ஞ்சா இலைகளா? இதெல்லாம் எப்படிங்க சாத்தியம்? தாய்லாந்தில் தயாரிக்கப்படும் வினோத பீட்சா!

Nov 29 2021 03:58:00 PM

மேலைநாடுகளில் மிகப்பிரபலமான உணவு என்றால் அது நிச்சயம் பீட்சா தான். சீஸ் உருகி வழிந்தோடும் பீட்சாவை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணுவாங்க. அப்படிப்பட்ட பீட்சாவில் க ஞ்சா இலைகளை வைத்து சாப்பிட கொடுத்தால் நீங்க அதை சாப்பிடுவீங்களா? கேட்கும்போதே மிகவும் விசித்திரமாக இருக்கும் இந்த பீட்சாவை தாய்லாந்து நாட்டில் தான் தயாரிக்கின்றனர்.

crazy-happy-pizza made-in-thailand

அங்கிருக்கும் ஒரு பிரபலமான பீட்சா தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு புதுமையான அனுபவத்தை தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக பீட்சாவில் க ஞ்சா இலைகளை வைத்து கிரேசி ஹாப்பி பீட்சா என்ற புதுவிதமான பீட்சாவை தயாரித்துள்ளது. இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரும். க ஞ்சா ஒரு போதைப்பொருள். உலகின் பெரும்பாலான நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள அதை வைத்து இவர்கள் எவ்வாறு பீட்சா தயாரிக்கின்றனர் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்.

crazy-happy-pizza made-in-thailand

எனக்கும் இந்த கேள்வி எழுந்தது. ஆனா இவங்க ரொம்ப சாமர்த்தியமான முறையில் க ஞ்சா இலைகளை பயன்படுத்தியுள்ளதால் இதை சாப்பிடுவதில் எந்த சிக்கலும் இல்லையாம். சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு வரை சமையலில் க ஞ்சாவை பயன்படுத்திக்கொள்ளலாம். அதனால் தான் இவ்வளவு தைரியமாக அதை பயன்படுத்தி பீட்சா தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

crazy-happy-pizza made-in-thailand

இதைப்படிக்கும் பலருக்கும் இன்னொரு சந்தேகமும் வரும். போதைப்பொருளான க ஞ்சா இலைகளை வைத்து தயாரிக்கப்படும் இந்த பீட்சாவை சாப்பிட்டால் நமக்கு போதை ஏறுமா அல்லது ஏறாதா? க ஞ்சா இலைகளை பற்றி அதிகம் தெரியாதவர்கள் கண்டிப்பாக இந்த பீட்சாவை சாப்பிட்டால் போதை ஏறும் என்று தான் நினைப்பாங்க. ஆனால் உண்மையில் இந்த க ஞ்சா பீட்சாவை சாப்பிட்டால் உங்களுக்கு போதை ஏறாது. இதற்காக அவர்கள் ஏதோ ரகசிய மூலப்பொருளை பீட்சா மீது தூவியிருப்பார்கள் என்று நமக்கு நினைக்க தோன்றும். ஆனால் அப்படி எதுவும் கிடையாது.

crazy-happy-pizza made-in-thailand

உண்மை என்னவென்றால் காய்ந்த க ஞ்சா இலை பயன்படுத்தினால் மட்டுமே அது போதை உணர்வை உண்டாக்கும். இந்த பீட்சாவுக்கு பயன்படுத்தப்படுவது புதிய பசுமையான இலைகள் என்பதால் இதை சாப்பிடுவதால் நமக்கு போதை ஏற்படாது. க ஞ்சாவை பற்றி இவ்வளவு விஷயம் சொல்வதால் இவன் ஒருவேளை அந்த மாதிரி ஆளாக இருப்பானோ என்று நினைத்து விடாதீர்கள். ஒரு பொருளை குறித்து தெரிந்துகொள்வதில் தவறேதும் இல்லை. எனவே நான் கஞ்சா இலைகள் குறித்த தகவலை மட்டுமே தெரிந்து வைத்திருக்கிறேன். நீங்க நினைக்கிறமாதிரி எதுவும் கிடையாதுங்க. இந்திய ரூபாய் மதிப்பின்படி இந்த க ஞ்சா பீட்சா 1100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருந்தாலும் இந்த பீட்சாவை 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே சாப்பிட முடியும். இந்தமாதிரி வினோதமான பீட்சா குறித்து நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டிருந்தால் அதை இங்கே சொல்லுங்க.