Out of Box

#covid19: கொரோனாவை பயன்படுத்தி காசு பார்க்க கிளம்பியிருக்கும் கூட்டம்! பாதிக்கப்பட்ட நடிகரின் புலம்பல்!

Mar 24 2020

கொரோனாவை காரணமாக வைத்து கொள்ளையடிக்கும் கூட்டம், இவர்களை என்னவென்று சொல்வது? உதவ வேண்டிய நேரத்தில் உதவாமல், இதுதான் சம்பாதிக்க சரியான நேரம் என நினைத்து கொண்டு காசு பார்க்க கணக்கு போட்டு வருகிறார்கள் ஒரு சிலர். என்ன சொல்ல வருகிறோம் என்பதை, பலர் இன்று அனுபவ ரீதியாக பார்த்து இருப்பீர்கள். ரெட் சோனாக அறிவிக்கப்பட்டுள்ள ஈரோட்டில் முகத்திற்கு அணியும் மாஸ்க் மற்றும் சேனிடைசர்களுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. ஒரு சில மருந்தகம் மற்றும் பொதுவான அங்காடிகளில் மிக குறைவான அளவே ஸ்டாக் உள்ளதால், இவற்றின் விலையையும் உயர்த்தியுள்ளனர். 

நேற்று நடிகர் பால சரவணன் சேனிடைசர் வாங்க கடைக்கு சென்றபோது, 60 ரூபாய் மதிப்புள்ள சேனிடைசரை 135 ரூபாய்க்கு விற்பதாகவும், ஏன் இப்படி விலையை ஏற்றி சொல்கிறீர்கள் என இவர் கேட்டதற்கு அந்த கடையாளர், தான் இங்கு வேலை மட்டுமே செய்வதாக கூறியுள்ளார். இவர் கேள்வி கேட்ட பிறகு, கடைக்கு வந்த பலரும் இவ்வாறே புலம்பியதாக கூறியுள்ளார். அவசர காலத்தில் இலவசமாக தரவேண்டிய பொருட்களை, லாபத்திற்கு ஏற்றி விற்பது சரியா? என கேட்டு காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மாஸ்க் தட்டுப்பாடு இருப்பதை உணர்ந்த தேனி குடிசை தொழிலாளி பெண்கள், தாங்களே வீட்டில் மாஸ்குகளை தயாரித்து, அருகே உள்ள மருந்தகங்களில் நியாயமான விலைக்கு விநியோகித்து  வருகின்றனர். ஏழை பெண்களுக்கு உள்ள சமூகத்தின் மீதான அக்கறை, பணக்கார முதலாளிகளுக்கு இல்லை. இதுவே சரியான நேரம் என சம்பாதிக்க ஆயத்தமாகிவிட்டார்கள். இதுமட்டுமா காய்கறி, பாக்கெட் தீன்பண்டங்கள் என எல்லாமே அநியாய விலைக்கு விற்பனை செய்து வருவதை அறிந்த அரசு, அநியாய விலைக்கு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியும் கூட, திருந்தியபாடில்லை. மக்களும் சூழல் இப்படி இருப்பதால், வாதாட முடியாத நிலையில் கடைக்காரர் சொல்லும் விலைக்கு வாங்கி செல்கின்றனர். அப்போது இதற்கு தீர்வு என்ன என யோசித்த போது, "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டு ஒழியாது" என்ற மக்கள் திலகத்தின் பாடல் தான் நினைவுக்கு வருகிறது.    

Top