Hugs & Kisses

அது என்ன கப்பிள்ஸ் மீட்? கேரளாவில் தொடங்கி இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் மோசமான கலாச்சாரம்!

Jan 14 2022 07:59:00 PM

கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் ஒரு விஷயம் வேகமாக பரவி வருகிறது. அதாவது கப்பிள்ஸ் மீட். மீட் என்றவுடன் ஏதோ சாதாரண சந்திப்பு என்று நாம் நினைப்போம். இது ஒரு வேற மாதிரியான சந்திப்பு பாஸ். திருமணமான ஜோடிகள் தங்கள் குடும்பத்துடன் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வார்கள். அங்கு அதேபோல நிறைய திருமணமான ஜோடிகள் இருப்பார்கள்.

couples meet kerala people culture

அங்கே இருக்கும் ஜோடிகள் அனைவரும் தங்கள் மனைவிகளை மாற்றிக்கொண்டு உறவில் ஈடுபடுவார்கள். இந்த சம்பவம் சமீப காலமாக கேரளாவில் நடைபெற்றுவருகிறது. இதில் ஈடுபடுபவர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ள குழுக்கள் மூலம் தங்கள் தகவல்களை பரிமாறிக்கொள்வார்கள். யாருடைய மனைவியை யாருக்கு பிடித்தாலும் அவர்கள் அந்த பெண்களுடன் உறவில் ஈடுபடலாம்.

couples meet kerala people culture

இதில் சிலருக்கு உடன்பாடு இருந்தாலும், உடன்பாடு இல்லாவிட்டாலும் இந்த காரியத்திற்கு சம்மதம் தெரிவித்தாக வேண்டும். முக்கால் வாசி பேர் இந்த காரியத்திற்கு ஒத்துக்கொண்டு தங்களுக்கு தேவையான ஜோடியை தேர்வு செய்துகொள்கிறார்கள். சமீபத்தில் பெண் ஒருவர் இது குறித்து காவல் துறையில் புகார் அளித்தார்.

couples meet kerala people culture

தன்னுடைய கணவர் தன் விருப்பமின்றி வேறு சில ஆண்களுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்துகிறார் என்று புகார் அளித்தார். அதன் பிறகு தான் இப்படி ஒரு கும்பல் சுற்றுகிறது என்று காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். எல்லோரும் தங்கள் விருப்பத்தின் பேரில் இந்த செயலில் ஈடுபட 100 சதவீதம் வாய்ப்பே இல்லை. இந்த சம்பவங்களுக்கு பின்னால் மிகப்பெரிய போதைப்பொருள் மற்றும் போதை மருந்து கடத்தும் கும்பல் காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

couples meet kerala people culture

கேரளாவில் தொடங்கிய இந்த கப்பிள்ஸ் மீட் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு கேரளாவில் அதிக வரவேற்பு உள்ளதால் நிறைய ஜோடிகள் வெளிமாநிலங்களில் இருந்து கேரளா நோக்கி விரைகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

couples meet kerala people culture