Out of Box

#coronorumours: கொரோனவால் வளர்ந்த வதந்திகள் என்னென்ன என்பதை அடையாளம் கண்டுகொள்வோம்!

Mar 25 2020

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன் அவர்களை கேள்விப்பட்டிருப்போம். கொரோனா நிலவரத்தில் இவரை போன்று  கொரோனா வைரஸ் ஆய்வாளர்களின் அறிவுரை 'இன்றியமையாதது. என்ன செய்ய வேண்டும் என்ற விளக்கத்தை எல்லோரும் கூறியிருப்பார்கள். ஆனால் எதுவெல்லாம் வதந்தி என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் கொரோனா வைரஸை விட இங்கு வதந்தி தான் வேகமாக பரவுகிறது.  அப்படி பரவும் வதந்திகலை அடையாளம் கண்டுகொள்ள சில ஆலோசனைகளை வழங்குகிறார் டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன் 

#1. அதிகமாக வெயிலில் வைரஸ் உயிரோடு இருக்காது என கேள்விப்பட்டிருப்போம். வெயிலிலும் காற்றின் ஈரத்தன்மை இருக்கும். பரவும் வேகம் மட்டும் குறைவாக இருக்கும். ஆனால் முற்றிலும் பரவாது என வரும் வதந்திகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்.

#2. மாமிசம் தின்றால் வைரஸ் வந்துவிடும் என ஒரு கூட்டம் கிளப்பிவிட்டுள்ளது.  வைரஸ் இருந்தாலும் நூறு டிகிரி செல்ஷியஸில் இறந்துவிடும். அப்படி இருக்க மாமிசத்தை தூய்மையான நீரில் சமைத்து உண்ணுங்கள் 

#3. நிறைய தண்ணீர் குடித்தால் வராது என ஓர் தகவல் வைரலாவதை கேள்விப்பட்டிருப்போம். பொதுவாகவே அதிக நீர் பருகுவது உடல் நலத்திற்கு நல்லது. ஆனால் வைரஸை எதிர்த்து போராடும் என கூறுவது அப்பட்டமான புரளியே!

#4. சில வாரங்களுக்கு முன்னர், அறுபது வயதிற்கு மேற்பட்ட சீனர்களை முடித்துக்கட்ட சீனாவே உருவாக்கிய வைரஸ் என சிலர் கிளப்பிவிட்டனர். இவர்களின் கற்பனை திறன் வரம்பு மீறி ஓடிவிட்டது 

#5. கிராமங்களில் இருப்பவர்களுக்கு வராது என்ற மெத்தனமான புரளி ஒருபக்கம் பரவி வருகிறது. கிராமங்களில் நகரத்தை காட்டிலும், கூட்டம் குறைவாக இருக்கும். கூட்டமான சூழலே பரவ தகுந்த ஊடகம் என்பது மட்டுமே கவனிக்க வேண்டியது. ஆனால் எச்சரிக்கை இல்லாவிடில் எதுவும் எல்லைமீறி சென்றுவிடும். 

#coronorumours, இதைவிட முக்கியமான ஒன்று, கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அவர்களது இஷ்டத்திற்கு ஏற்றவாறு கூறிவிட்டு செல்வது என இப்படி வதந்திகள் தினம் தினம் வித்தியாசமான ரூபத்தில் வலம் வருவதால், நாம் தான் எது உண்மை பொய் என ஆராய்ந்து பார்த்து செயல் படவேண்டும். 
 
   

Top