Spellbound

#covid19: கொரோனாவை, வைத்து செய்யும் மீம்ஸ்கள்!

Mar 26 2020

வீட்டிலிருந்தே வேலை செய்யும் பரிதாபங்கள் எல்லாம் நேர்கொள்ளும் பிரச்சனை. சீரியஸாக அதிகாரியிடம் பேசிக்கொண்டு இருப்போம். அப்போதுதான் அம்மாவோ மனைவியோ. டீ வேணுமா காபி வேணுமா என்பார்கள்.

  

முதலில் இருமினால் யாரோ திட்டுகிறார்கள் என்பார்கள், இப்போது இருமினாலே திட்டுகிறார்கள்.

போன்ல தான் கொரோனா பரவுதுனு ஒரு புரளி வந்திருந்தால்? 

இதுவும் நல்ல ட்ரிக் தான். கொரோனா தீவிரம் குறைந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியதும் பஸ்ஸில் கூட்டம் இருக்கும் போது, இதனை ஃபாலோ செய்யலாம்.

கல்யாணத்தில் கூட்டமும் சேராது, செலவும் குறைவு. மொய்யும் வந்ததது போல இருக்கும். காசுதான் இருக்கிறது என பொருளாதார நிலையை காட்டவே ஆடம்பர செலவு செய்வோருக்கு கொரோனா கற்பித்த பாடம்.

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வரும்போது, ஏதாவது வாங்கி வந்தார்களா என பார்க்க சென்றவர்கள் எல்லாம், வைரஸை ஒட்ட வைத்து விடுவானோ என தெறித்து ஓடுகிறார்கள்.

ஒருநாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த போது, பலரும் இப்படித்தான். வெளியே வந்துவந்து பார்த்து விட்டு போவது. கேட்டால் ஆள் நடமாட்டம் இருக்கா என பார்க்க வந்தார்களாம்.       

எந்த ஒரு இறுக்கமான சூழலையும் தளர்த்திவிடும் வல்லமை கொண்டவை மீம்ஸ்கள். கொரோனாவால் நாட்டில் என்ன நிகழ்கிறது என்பதை மீம்ஸ்கள் எதார்த்தமாக காட்டிவிட்டன. 

  

Top