Misc

#OMG: புரதத்தை திருடி தின்னும் கொரோனா! புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்!

Mar 24 2020

பேக்டீரியாக்களுக்கும் வைரஸ்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு எந்த வைரசுமே தானாகவே தனக்கு வேண்டிய புரதத்தை தயாரிக்க முடியாது என்பதுதான். வைரஸ்கள் தான் அடைக்கலமான உயிரின் (host) உள்ளே புகுந்து அங்கு தனக்கு வேண்டிய புரதத்தை தயாரிக்க வைக்கின்றன. நமது செல்லில் எம்ஆர்என்ஏ (mRNA) எனும் பாகம் புரதத்தை உற்பத்தி செய்கின்றன. கொரோனா வைரசின் தோற்றம் எம்ஆர்என்ஏ(mRNA)வை ஒத்திருப்பதால் நமது செல் தவறுதலாக அதற்கு வேண்டிய புரதத்தை தயாரித்துக் கொடுத்துவிடுகின்றன.

your image

இதன்பின் கொரோனா வைரஸ் நமது செல்லை அழித்துவிட்டு  அதிலிருந்து வெளியேறி வேறு செல்களுக்குள் புகுந்து மீண்டும் தனக்கு வேண்டிய புரதத்தை தயாரிக்க வைக்கும். இப்படி ஒவ்வொரு செல்லாக மாறி மாறி உடலுக்கு சேர வேண்டிய புரதத்தை கொரோனா திருடி தின்று விடுகிறது. உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காமல், நோயெதிர்ப்பு சக்தி குறைந்து நோய் வர வழி வகுக்கிறது.

Top