Out of Box

#kickoutcorona: இத்தனை அலட்சியமா? பத்து நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் நிலைதான் இத்தாலிக்கு!

Mar 25 2020

பத்து நாட்களுக்கு முன்னர் இத்தாலி மக்களும் நம்மை போலத்தான் எந்த ஒரு பாதுகாப்பும் இன்றி அசால்ட்டாக இருந்தார்கள். இந்தியாவும் இப்போது அதே நிலையில் தான் உள்ளது. அரசு ஆறு மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும், காவல்துறை அதிகாரிகள் வந்து மிரட்டும் வரை வீட்டிற்குள் செல்ல முனைப்பு காட்ட மறுக்கிறார்கள். சுயமாக பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்தவர்கள் அரிதே! 

மருத்துவ வசதியில் முன்னணியில் உள்ள நாட்டின் பிரதமரே, எங்களுக்கு உதவ யாரும் இல்லையா என கண்ணீர் வடிக்கிறார். அங்கு போதிய வசதி இல்லாத காரணத்தால், அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களை அட்மிட் செய்ய வேண்டாம் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

வளர்ந்த நாடுகளே இந்த சூழலை சமாளிக்க திணறும் போது, வளர்ந்து வரும் நாடுகள் என்ன செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.  இந்த சூழலை சமாலிக்கத்தான் இந்தியா, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக முடுக்கிவிட்டுள்ளது. அதனை புரிந்துகொள்ளாமல் இத்தனை அலட்சியமா? இனி வரும் 21 நாட்களில் ஒருவர் சரியாக விதிமுறையை கடைபிடிக்காவிடினும், ஒட்டுமொத்த நாட்டையும் பாதிக்கும் என்பதை மறக்க வேண்டாம். கடுமையான சூழலிலும் எப்படி சர்வைவல் செய்ய வேண்டும் என்பதை சீனா காட்டிவிட்டது.  அங்குள்ள தொழில்நுட்பத்திற்கே அவர்களுக்கு ஆட்டம் காட்டிவிட்டது கொரோனா. இங்கு முன்னெச்சரிக்கை இல்லையெனில் கொரோனா பாய் விரித்து படுக்கை போட்டுவிடும். இந்த 21 நாட்கள் உஷாராக இல்லாவிடில்?

 

Top