Misc

#Cute: கொரோனா வைரஸ் நமக்கு வாழ்வைப் பற்றி சொல்லித்தரும் பாடம்!

Mar 23 2020

ஊரே கொரோனா, கொரோனா என்று பீதி உண்டாக்கினாலும், "யாரும் இருக்கும் இடத்தில், இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே". கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு ஓடும் மனித இயந்திரத்திற்கு, கொஞ்சம் ஓய்வு கொடுத்து பார்க்கலாமே என்கிற தோணியில், இறங்கி விளையாடி வருகிறது கொரோனா. கொரோனா வைரஸ் நமக்கு வாழ்வைப் பற்றி தெளிவாக்குகிற விஷயங்கள் பல இருந்தாலும், ஒரு சிலது மிக முக்கியமானது.

your image

#1. ஒவ்வொரு தனி மனிதனின் செயலும் அது நல்லதோ, கெட்டதோ உலகில் எல்லா மூலையையும், எல்லா உயிரையும் பாதிக்கும் என்பதே.

#2. ஒவ்வொருவரும் சுயநலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். நாம் சரியாக நம்மை கவனித்து நல்லபடியாக வைத்துக் கொள்ளாத பட்சத்தில் நம்மால் மற்றவருக்கும் தீங்கு விளையலாம்.

#3. இந்த நேரத்தில் கடவுள், மதம் எல்லாம் பற்றி பேச வேண்டியதில்லை. அதெல்லாம் தானாக தெரிய வேண்டியது.

#Cute: உலகமே வீட்டுக்குள் வேலை, வருமானம் இன்றி அடைந்து கிடந்த போதிலும், சுற்றி இருப்பவர்களுக்கு ஒன்றும் ஆகக்கூடாது என்று சிந்திக்கும் மன நிலைக்கு மாற்றியுள்ளது கொரோனா.

Top