Misc

இதுவும் நம்மளோட கண்டுபிடுப்பு கிடையாதா? எல்லாமே இறக்குமதி செய்யப்பட்ட சரக்கா? சாயம் வெளுத்துப்போச்சு பங்காளி!

Sep 25 2021 04:39:00 PM

சிக்கன் டிக்கா மசாலா என்பது மசாலா கறி சாஸில் வறுத்த சிக்கன் துண்டுகள் (சிக்கன் டிக்கா) கொண்ட ஒரு உணவாகும். இதற்கு பயன்படுத்தப்படும் கறி பொதுவாக கிரீமி மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். தெற்காசியாவைச் சேர்ந்த சமையல்காரர்களால் இந்த உணவு பிரபலமானது. சிக்கன் டிக்கா மசாலா இந்திய உணவில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

chicken-tikka-masala

ஆனால் இந்த சிக்கன் டிக்கா மசாலா இந்திய நாட்டில் இருந்து தோன்றிய உணவு கிடையாது. நம்மில் பலருக்கும் சிக்கன் டிக்கா மசாலாவின் தோற்றம் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வட இந்தியாவில் உள்ள ஒரு உணவகத்தில் நம்ம ஆளு ஒருத்தன் சமையல்காரனாக வேலை பார்த்து வருகிறான். அவனும் சிக்கன் டிக்கா மசாலா செய்வதில் கெட்டிக்காரன். அவன் தான் இந்த உணவின் ரகசியத்தை என்னிடம் கூறினான்.

chicken-tikka-masala

சிக்கன் டிக்கா மசாலா முதன் முதலில் ஸ்காட்லாந்தில் தோன்றியது. 1970களில் இந்த உணவு அறிமுகமானது. வங்கதேசத்தை சேர்ந்த சமையல் நிபுணர் ஒருவர் ஸ்காட்லாந்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். புதுமையான வடிவில் சிக்கனை கொடுக்க நினைத்து அவர் உருவாக்கிய மசாலாவே சிக்கன் டிக்கா மசாலா என்று அழைக்கப்பட்டது.

chicken-tikka-masala

இந்தியாவில் உள்ள பல பகுதிகளிலும் சிக்கன் டிக்கா மசாலா மிகப்பிரபலமான உணவாகும். இதைப்பிடிக்காதவர்களை காண்பது அரிது. இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுமே சிக்கன் டிக்கா மசாலா பிரபலமான உணவாக மாறியுள்ளது. அதற்கு காரணம் இந்த உணவின் ருசி மட்டுமே.

chicken-tikka-masala

இந்த தகவல்களை அவன் கூறியவுடன் எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. இந்தியர்களின் மிக முக்கியமான உணவு இங்கு தோன்றவில்லை என்பது வியப்பை தருகிறது. சரிடா எப்போ உன் கையால சிக்கன் டிக்கா மசாலாவை சமைச்சு போடப்போற என்று கேட்டால் ஊருக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினான். இந்த கொரோனா பிரச்சனை முடியாமல் அவன் ஊருக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை. அவன் சிக்கன் டிக்கா மசாலா செஞ்சி தரத்துக்கும் வழியில்லை. நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிட கிளம்ப வேண்டியது தான்.