HotPicks

பொறந்தா இங்க பொறக்கணும்! இவங்கள பார்க்கணும்னா 18 கி.மீ தூரம் நடக்க வேண்டுமாம்! கொரோனாவா? அப்படீன்னா என்னான்னு கேட்கும் கிராம மக்கள்!

May 14 2021 10:07:00 PM

நகரங்களில் வாழும் மக்களை விட, கிராமங்களில் வாழும் மக்களுக்கு உயிர் காக்கும் திறன் சற்று அதிகமாகவே இருக்கும். கிடைப்பதைக் கொண்டு வாழ்வை நடத்தும் நுணுக்கம், கிராம மக்களுக்கு பிறவியிலேயே ஊறிப்போன ஒன்று. இவர்களிடம் உள்ள பொது அறிவும், சுயக்கட்டுப்பாடும் அனைவரிடமும் வந்துவிட்டால், இந்த பெருந்தொற்றை எளிதாக வென்றுவிடலம். சமீபத்தில் என்னை ஆச்சர்யப்படுத்தியது கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு மலைகிராமம்.

edamalakkudy kerala village

எராவிக்குளம் தேசிய பூங்கா எல்லைக்குள் அமைந்துள்ள சிறிய மலை கிராமத்தில், 3000 மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். நீங்க ஆப்-ரோடு ஜீப் வைத்திருந்தாலும், இந்த கிராமத்தை எளிதில் நெருங்க முடியாது. 35,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஊருக்கு செல்ல, சாலை வசதியே கிடையாது. இந்தியா முழுக்க தனித்துவிடப்பட்ட நிறைய ரிமோட் கிராமங்கள் உள்ளன. அவற்றில் இது ரொம்ப தனித்துவமானது. மழை வெள்ளத்தில் இருந்த, காட்டு சாலையும் அடித்து செல்லப்பட்டதால், மக்கள் அடர்ந்த வனத்திற்குள் நடந்து, வெளி உலகுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றனர்.

edamalakkudy kerala village

சாதாரணமா இல்லைங்க. சுமார் 18 கிலோமீட்டர் காட்டுக்குள் நடந்தால் மட்டுமே இந்த கிராமத்தை அடைய முடியும். நாமெல்லாம் இங்கே கொரோனா கொரோனான்னு கத்திகிட்டு இருக்கோம். கேரளாவில் நம்மைவிட வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா கிராமங்களையும் நெருங்கிவிட்டது. ஆனால் இந்த கிராமத்தில் ஒருவருக்குக்கூட கொரோனா கிடையாது. நோய் பற்றி கேள்விப்பட்ட உடனே, தங்களை முழுமையாக தனிமைப்படுத்திக் கொண்டனர். வெளி ஆட்களுக்கு அனுமதி கிடையாது.

edamalakkudy kerala village

உணவுக்குக் கூட யாரையும் சர்ந்திருப்பதில்லை. அவங்க கிராமத்திற்குள் கிடைப்பதை உண்டு, உயிர் வாழ்கின்றனர். அப்படியே ஊரில் இருந்து யாராவது வெளியே போக வேண்டிய சூழல் வந்தால், திரும்பி வரும் போது, கட்டாய தனிமைப்படுத்துதலை மேற்கொள்கின்றனர். படித்த ஆட்களே நம்ம ஊரில் அரசு சொல்வதை மதிக்காமல் சுற்றும் வேளையில், மலை கிராம மக்கள் இவ்வளோ கட்டுக்கோப்புடன் இருப்பது வியக்க வைக்கிறது. 2017 ஆம் ஆண்டின் இறுதியில் மின்சாரம் எட்டிப்பார்த்தது. சாட்டிலைட் மூலம் மொபைல் தொடர்பு இருக்கிறது. இப்படியொரு கிராமத்தில், நாம் இருந்திருக்க மாட்டோமா என மனது நினைக்கிறது. அந்த கிராமத்தின் பெயர் எடமலக்குடி.