Out of Box

தொடர்ச்சியாக அரங்கேறும் கால் டாக்ஸி நிறுவனங்களின் மறைமுக மோசடி? கார் ஓட்டுநர்களின் வயிற்றில் அடித்துப் பிழைக்கும் திட்டமிட்ட சதி! கண்ணீர் வடிக்கிறாங்க!

Jul 20 2021 06:28:00 AM

லேட்டஸ்ட்டா ஒரு நியூஸ் பார்த்தேன். கால்டாக்ஸி ஓட்டுனர்கள் OLA நிறுவனத்தை ஏமாற்றிவிட்டதாகவும், அதற்கு OLA நிறுவனத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் சொல்லியிருக்காங்க. நமக்கு இந்த செய்தியை பார்த்த உடனே ஓட்டுநர்கள் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறாங்கன்னு தான் தோன்றும். மக்களை இந்த மாதிரி நம்ப வைக்க கார்ப்பரேட் கம்பெனிகள் செய்யும் சதி இது. யாராவது ஒருத்தர் செய்யும் தவறை வைத்து, மொத்த ஓட்டுனர்கள்  மீதும் ஒரு எதிர்மறையான பிம்பத்தை உண்டாக்கி இவங்க இலாபம் பார்ப்பாங்க.

taxi ola uber

இப்போ அவங்க மேல வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னான்னா, டிரிப் எடுக்காமலேயே பயணித்தது போலக்காட்டி கமிஷன் வாங்கியதாக சொல்றாங்க. இது குறித்து OLA ஓட்டுநர்கள் சில பேரிடம் விசாரித்துப் பார்த்தேன். அப்படி செய்தால், முழு தொகையும் டிரைவர்கள் தான் கொடுக்க வேண்டும். அதிலிருந்து கமிஷன் தொகையாக ஒரு பகுதியை அந்த நிறுவனம் எடுத்துக்கொண்டு, அந்த கமிஷனில் இருந்து சிறு தொகை ஓட்டுனருக்கு கிடைக்கும் என்றனர். அப்படிப்பார்த்தால் நிறுவனத்துக்கு எந்த நஷ்டமும் இல்லை. இருந்தும் இதனை ஒரு செய்தியாக எப்படி வெளியிட்டாங்கன்னு தெரியல.

taxi ola uber

இப்போ சில மீடியாக்கள் நியூஸ் கிடைக்கவில்லையென கற்பனையா செய்தி உருவாக்க ஆரம்பிச்சுட்டாங்க போலிருக்கு. இந்த சம்பவம் எங்கு நடந்தது? இதில் யார் சம்பந்தப்பட்டிருக்காங்க? என்ற விவரம் கூட தெளிவா இல்லை. பெரிய பெரிய கால் டாக்ஸி நிறுவனங்கள் தொடர்ந்து டிரைவர்களை ஏமாற்றும் செயலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். என்றைக்காவது ஒருநாள் டிரைவர்கள் கஷ்டப்பட்டு இருக்கும் நேரத்தில் முன்னணி கால்டாக்ஸி நிறுவனங்கள் பிரஸ்மீட் நடத்தி பார்த்து இருக்கீங்களா?

taxi ola uber

ஒருமுறை நடத்திப்பார்க்கட்டுமே. அப்போதுதான் தெரியும் வாகனத்தையும் வாங்கிவிட்டு, வாகனத்தை இயக்குகின்ற டிரைவர்கள் எவ்வளவு துன்பத்திலும் துயரத்திலும் அழுத்தப்பட்டு இருப்பார்கள் என்று. எனவே தயவு செய்து இவ்வளவு நாள் கடின துயரத்தில் இருக்கும் அவர்களை, ஒரு சிலர் தவறு செய்தால் ஒட்டுமொத்த ஓட்டுநர்களையும் கேவலப்படுத்த வேண்டாம். 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு டிரிப்பை, நிறுவனத்தின் விளம்பரத்துக்காக 5 ஆயிரம் ரூபாய்க்கு ஓட்டும் போது தெரியும் அதன் வலி.