HotPicks

கடல் பயணத்திற்கு சென்று நடுக்காட்டில் மாட்டிக் கொண்ட தருணம்! கடலை காண்பதற்குள் விறுவிறுப்பாய் கடந்த நொடிகள்!

Feb 07 2020

கூகுள் மேப்பிற்கு தெரியாத இடங்கள் கூட இருக்கலாம்,.ஆனால்  இவருக்கு தெரியாத இடங்கள் இருக்காது. நண்பர் ஒருவர் வித்தியாசமான பயணங்களை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்.அப்படித்தான் அவர் சமீபத்தில் மேற்க்கொண்ட ஒரு ட்ரிப் பற்றி எங்களிடம் சொல்லவே, நகங்களை கடித்துக்கொண்டு கேட்க ஆரம்பித்தோம். ஒரு நிமிடம் கூட ஆர்வம் குறையவில்லை. எங்களிடம் அவர் கூறிய அவரது அனுபவம்,

'கோவா கலோங்கோட் பீச்சிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலே அந்த இடம். இந்த இடத்திற்க்கு கடல் மார்க்கமாக மட்டுமே செல்லவேண்டும். இல்லையென்றால் இன்னொரு வழி இருக்கிறது. காட்டுப்பாதை  மற்றும் மலைகளை கடந்து செல்லவேண்டும். மிகவும் அழகான இடம், 

அதாங்க  பட்டர்பிளை பீச்..

நானும் கூடே வந்தவர்களும் ஆளுக்கொரு சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கையில் கூகுள் மேப் உடன்  காட்டுப்பாதைக்குள் செல்ல ஆரம்பித்தோம்.

கூகுளின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு இரண்டு மணிநேரமாக சைக்கிளை மிதிக்க, திடீரென  அங்கு  ஒரு ஒத்தையடி பாதை.. 

கண்ணுக்கு எட்டுன தூரம்வரை பீச்சை காணோம். கூகுள் நேரம் பார்த்து காலைவாரிவிடுதேன்னு கும்பலா திட்ட ஆரம்பித்தோம். 

சரி! அந்த வழிய விட்டாலும் இப்போ வந்த வழியாகத்தான் திரும்பி போயாகணும்.அதனாலே அந்த    ஒத்தையடி பாதை வழியே செல்ல ஆரம்பித்தோம்.  

போக... போக..திடீர்னு பள்ளம்...

போற வழியெல்லாம் பள்ளமா இருந்ததாலே. அங்கேயே சைக்கிளை பூட்டி ஓரம் கட்டிட்டு நடந்து போக ஆரம்பிச்சோம். 

பயங்கரமான காடு, மனித நடமாட்டமே இல்லை..

போக போக எங்களுக்காக பல இன்ப அதிர்ச்சி காத்திட்டு இருந்தது. 

சின்ன ஊற்று அது. அதை தாண்டி தான் போகணும்..கண்ணாடி மாதிரி இருந்த அந்த ஊற்று நீருக்குள் காலை வைத்ததும்  குளிர்ச்சியால்,தலை முடியெல்லாம் நட்டுக்குச்சு..

இதை கடந்ததும் ஒரு குட்டை.

இனிமேல் முழுக்க முழுக்க அடர்ந்த காடு..

கையில் ஒரு குச்சியை வைத்துகொண்டு செடிகொடிகளை மெதுவாக விளக்கி கொண்டே சென்றோம். ஏதாவது  புழு பூச்சி வந்துடுமோனு பயம் வேற ஒரு பக்கம். 

கொஞ்ச தூரம் போனதும் குரங்குகள் எங்களை பார்த்து அங்கு இங்குமாய் தாவுது.  என்னை  தைரியசாலின்னு நினைச்சுகிட்டு என்ன முதல்ல நடக்க சொன்னங்க,  

நானும் காஞ்சனா படத்தில் வர லாரன்ஸ் மாதிரி பயத்தை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடந்தேன்.

கொஞ்ச தூரம் நடந்ததுமே..அலைகளின் சத்தம் மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது..

சரி! நம்மள நம்பி வர கூட்டத்தை சரியான வழியில தான் கூட்டிட்டு போயிட்டு இருக்கோம்ங்கற நம்பிக்கை வந்துருச்சு. இப்போதான் பெரிய அதிர்ச்சி காத்துட்டு இருக்குது.

பாதை நிறைவடைந்துவிட்டது..!

இனி மலை ஏறி தான் போகணும்.

மலையும் ஏறி இறங்கியாச்சு.,.

அடுத்து இரண்டு பேர் மட்டுமே நடக்கும் அளவிற்கு ஒரு சந்து. பல்லி மாதிரியே ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு நகர்ந்தோம்.

நடக்க நடக்க.. கடல் ஓசை சத்தம் ..

கொஞ்சம் நடந்ததும்,கடல் கண்ணில் பட்டுவிட்டது..சோந்துபோன எங்களுக்கு எனர்ஜி எங்கிருந்து தான் வந்ததோ!

இங்க நாங்க மட்டும்தான்..மனுஷ நடமாட்டம் இல்லாத கடற்கரை..! 

ஒவ்வொரு அலையும் ஒரு ஆளையே விழுங்கிவிடும்..! அவ்ளோ பெரிய ராட்சத அலைகள்.. 

ஆடிக்கொண்டே இருந்தோம்..! இருட்டற மாதிரி இருந்ததாலே மனசு  இல்லாம கிளம்ப வேண்டிய சூழல்...

மறக்க முடியாத பயணம்'  என நண்பர் கூறி முடித்தார்         

        

      

Top