HotPicks

பூரியை யாருக்குத்தான் பிடிக்காது! எல்லாரும் விரும்பி சாப்பிடுற அந்தப் பூரியை நீங்க இப்படி செஞ்சு குடுத்துப் பாருங்க, அப்புறம் எல்லாருமே உங்க பூரிக்கு அடிமை தான்!

Jan 13 2022 08:58:00 PM

இந்தியாவில் பிரபலமான உணவுகளில் பூரியும் ஒன்று. பெரும்பாலான இந்திய குடும்பங்கள் தங்கள் காலை உணவுகளில் பூரியை தவறாமல் சாப்பிட்டு வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய உணவு பூரி. ஆனால் பூரி செய்வது எளிதானதல்லமிருதுவாகவும், மென்மையாகவும், பஞ்சு போன்ற பூரிகளை விரும்புபவர்கள் சில விஷயங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். என்னதான் மாவை சரியாக செய்தாலும் மிருதுவான தன்மை அல்லது பூரி உப்பி வருவதற்கு பதிலாக தட்டையாக அப்பளம் போல மாறக்கூடும். பஞ்சு போன்ற மென்மையான பூரி செய்வதற்கான சில வழிகளைப் பார்ப்போம்.

poori recipe

பூரி மாவை சப்பாத்தி மாவு போல் தயார் செய்யாமல் பூரிக்கு ஏற்றார் போல் தயார் செய்ய வேண்டும். கோதுமை மாவு, தண்ணீர், பால் மற்றும் எண்ணெய் அல்லது நெய் ஆகியவை சேர்த்தால் மிருதுவான பூரி கிடைக்கும். நீங்கள் சேர்க்கக்கூடிய பால் இளஞ்சூடாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ரவையை மிக்ஸியில் அரைத்து சேர்ப்பதன் மூலம் நல்ல மிருதுவான வெளிப்புறத்தைப் பெறலாம். மேலும் மாவில் நெய் சேர்ப்பதன் மூலம்  நல்ல  மிருதுவான பூரி கிடைக்கும்.

poori recipe

பூரியில் அதிகம் எண்ணெய் இல்லாமல் இருக்க சில வழிகள் உள்ளனபூரியை போடுவதற்கு முன்பு எண்ணெயில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். இதன் மூலம் பூரி எண்ணெய் நிறைந்ததாக இல்லாமல் இருக்கும். மாவை பிசைந்து 15 நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து அதை வெளியே எடுத்து பூரி செய்யலாம். இதனால் எண்ணெய் அதிகம் இல்லாமல் இருக்கும்.

poori recipe

சரியான தங்க பழுப்பு நிறத்தில் பூரி வேண்டுமென்றால் மாவில் அரைத் தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்  சர்க்கரை உங்களுக்கு அழகான நிறத்தை கொடுக்கும். மேலும் எண்ணெயில் வெப்பநிலையை சரியாக பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பூரியை மிகவும் சூடான எண்ணெயில் செய்தால் கருகிவிட வாய்ப்புகள் உண்டு.