Misc

தினமும் குளித்தும் ஏன் அக்குள் நாற்றம் போவதே இல்லை? கூட்டத்தில் நிற்கவே சங்கடமா இருக்கு! தப்பு வியர்வையில் இல்லையாம்!

Feb 26 2021 10:35:00 PM

நான் தினமும் நல்லா தான் குளிக்கிறேன். இருந்தும், என் அக்குள் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. கடுமையான துர்நாற்றம். என்ன செய்தாலும் தடுக்க முடிவதில்லை. இவ்வளவு நாள் வியர்வை தான் காரணமென நினைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் வியர்வைக்கு வாசனையே கிடையாது. நம்முடைய அக்குள் பகுதியில் அல்லது மற்ற உடல் பாகத்தில் குடிகொண்டுள்ள பாக்டீரியாக்கள், வியர்வையில் உள்ள புரோட்டீன்களை உடைக்கும் போதே, இந்தத் துர்நாற்றம் வீசுகிறது.

dress under-arm sweat

வியர்வை நாற்றம் குறையே வேண்டும் என்றால், தினமும் இரண்டு நேரம் குளிக்க வேண்டும். அக்குள் பகுதியில் அதிகமாக முடி இல்லாமல் பார்துக்கொள்ள வேண்டும். உள்ளாடைகள் மற்றும் ஆடைகளை ஒருமுறை மேல் துவைக்காமல் அணியக்கூடாது. சிலருக்கு மாட்டுக்கறி மற்றும் சில மாமிசம் உண்டால் உடலில் இருந்து துர்நாற்றம் வீசும். ஒருமுறை அதனை உணர்ந்துகொண்டால், திரும்ப திரும்ப அதனையே முயற்சிக்க கூடாது. தவிர்த்து விட வேண்டும்.

dress under-arm sweat

கிராமத்துப்பக்கம், தரமான ஆவாரம்பூ பொடி பாலில் கலந்து சாப்பிட்டால், நாளடைவில் படிப்படியாக நாற்றம் அறவே இல்லாமல் போகும்னு சொல்வாங்க. ஆவாரம்பூ தங்க பஸ்பத்திற்க்கு நிகரானது. இது தவிர, சோப் தவிர்த்து குளியல் பொடி உபயோகிக்கலாம். குளிக்கும் நீரில் சிறிது வேப்பிலை சிறிது போட்டு வைத்து, சிறிது நேரம் கழித்து உபயோகிக்கலாம். பழங்கள் அதிகமாக உண்டு வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

dress under-arm sweat

படிகாரம் கிடைத்தால், அதை பொடியாக்கி வைத்து, குளித்த பின் அக்குளில் தடவிக் கொண்டு வார வேண்டும். நாளடைவில் நாற்றம் போய் விடும். நானாவது வெட்கத்தை விட்டு வெளியே நிறைய பேரிடம் ஆலோசனை கேட்கிறேன். பலரும் பயங்கர அக்குள் நாற்றத்துடனே வெளியில் வருகின்றார்கள். பக்கத்தில் நிற்கவே முடியாத அளவுக்கு மோசமாக இருக்கின்றது. சின்ன சின்ன வழிமுறைகளை கையாண்டு, உணவில் கட்டுப்பாடாக இருந்தாலே, உடல் துர்நாற்றம் வராது.