Spellbound

என்ன குருநாதா உன்னையவே இப்படி பண்ணிட்டாங்க ! ஊரையே கழுவி ஊத்துணியே தெய்வமே! உனக்கே இந்த நிலைமையா?

Apr 07 2021 04:55:00 PM

தமிழ் திரை உலக ரசிகர்களால் விரும்பி பார்க்கப்படும் விஷயங்கள் இரண்டு. முதலாவது தங்களுக்கு விருப்பமான நடிகர்களின் படங்களை திரையில் சென்று பார்ப்பது. அடுத்த வகை அந்த படத்தை பற்றி எப்படி விமர்சனம் செய்திருக்கிறார்கள் என்று youtubeயில் பார்ப்பது. அதுவும் ஒரு குறிப்பிட்ட நபரின் விமர்சனத்தை பார்க்க இந்த நாடே காத்துக்கிடக்கும். அவர் தான் நம்ம ப்ளூ சட்டை மாறன்.

blue sattai maran movie release

இவர் விஜய் படங்கள் வரும்போது எந்த அளவுக்கு கலாய்க்க முடியுமோ அந்த அளவுக்கு கலாய்த்து தள்ளுவார். அதேபோல அஜித் படங்கள் வரும்போது விஜய் படத்தை எப்படி கலைத்தாரோ அதைவிட பல மடங்கு கலாய்த்து தள்ளுவார்.

blue sattai maran movie release

காரணம் ஒரு பெரிய நடிகருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு அவருக்கு வெ றுப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சில youtube சேனல் உரிமையாளர்கள் விமர்சனம் செய்வார்கள். அவர்களில் நம்ம ப்ளூ சட்டை மாறன் தான் முதலிடம்.

blue sattai maran movie release

இப்படி எல்லா படத்தையும் விமர்சனம் செய்கிறாயே, நீ ஒரு படம் எடுத்துப்பார், உனக்கு என்ன தெரியும் ஒரு படம் எடுப்பதைப் பற்றி, முடிந்தால் ஒரு படம் எடுத்துக்காட்டு என்று இவரால் பாதிக்கப்பட்ட பலர் விமர்சனம் செய்தார்கள். குருநாதர் சும்மா இருப்பாரா? உடனே தன் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார். கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தும் எழுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தின் பெயர் ஆண்ட்டி இந்தியன்.

blue sattai maran movie release

படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதற்கு முன்னர் படத்தை சென்சாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் நிகழ்கால அரசியல் பற்றி பேசி இருப்பதாகவும், ம தம் சார்ந்த நிறைய பிரச்சனைகளை பேசி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையை சொல்லப்போனால் படத்தில் பாஜக பற்றி கலாய்த்துள்ளார்கள். இதனால் இந்த முழு படத்துக்கும் த டை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

blue sattai maran movie release

எவ்ளோ தைரியம் இருந்தா எங்க குருநாதர் மேலயே கை வச்சுருப்பீங்க? அவரு எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். மீண்டும் படத்தை மறு தணிக்கைக்கு அனுப்புவோம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

blue sattai maran movie release