His & Her

#blackfashion: கருப்பு நிற ஆடையை விரும்புபவரா நீங்க? உங்களது உள்ளத்தை வெளிக்கொணரும் மாயக்கண்ணாடி!

Mar 21 2020

'காக்கைச் சிறகினிலே நந்தலாலா' என பாரதியை ஈர்த்த நிறம் இன்று பலரையும் கவர்ந்துள்ளது. முன்னரெல்லாம்  விசேஷங்களுக்கு செல்பவர்கள் கருப்பு நிற உடையை அணியமாட்டாரகள். ஆனால் இன்று கருப்பு நிறம் ஃபேஷன். இப்படி கருப்பு நிறம் எல்லோருக்கும் ஒத்துப்போக முக்கிய காரணம்,  அணிபவர்களுக்கு எடுப்பாக உள்ளதுதான்.

மற்ற நிறங்களை காட்டிலும் கண்களுக்கு இதமானதாக இருக்கும். ஒரு அறையில் முப்பது பேர் இருந்தாலும் கருப்பு நிற உடை அணிந்தவர்களை மட்டும் தனியாக காட்டும். பொது கலந்துரையாடலில் எல்லோரின் கவனமும் உங்கள் மேல் இருக்க விரும்பினால், கருப்பு நிற ஆடைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கருப்பு நிற உடை அணியும் போது, முகம் தெளிவான தோற்றத்தை அளிக்கும். அதுமட்டுமில்லை உடலை கச்சிதமாகவும் காட்டும். 

வெள்ளியிலான ஆபரணங்களை அணிய கருப்பு சிறந்த சாய்ஸ். பெண்கள் கருப்பு புடவையுடன்  ப்ளாக் மெட்டல் ஆபரணத்தை அணிந்தால் அழகை மிகைப்படுத்திக்காட்டும். ஆண்கள் கருப்பு நிற ஆடை அணிந்திருந்தால், ப்ளாக் மெட்டல் ஸ்ட்ராப் கொண்ட வாட்ச் அணிந்திருக்கும் போது இன்னும் சிறப்பு. முக அமைப்புக்கு பொறுத்தவாறு அணியும் கருப்பு நிற சன் கிளாஸ் உங்களது தோற்றத்தை ஏற்றி காட்டும்.  .

இது எல்லாவற்றையும் விட கருப்பு நிறம் கண் திருஷ்டி படாமல் பாதுகாக்கும். கருப்பு நிறம் அணிபவர்கள் என்றால் அவர்களுக்கென கண்டிப்பாக ஒரு சில குணாதீசியம் உண்டு. தன்னமிக்கை கொண்டவர்களாக, எப்போதும் தங்களுக்கு மனதில் பட்டதை வெளிப்படையாக கேட்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை ஆளுமை செய்ய விருப்பம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். இதை தவிர்த்து தொடர்ந்து ஒருவர் கருப்பு நிற ஆடை அணியும் போது மன அழுத்தத்தில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.              

Top