HotPicks

பிரியாணி பிரியர்களின் கவனத்திற்கு! உங்களுக்கு பிரியாணி சாப்பிடுவதில் அலாதி பிரியமா? அப்போ அதில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியும் தெரிஞ்சுக்கோங்க

Jan 13 2022 09:21:00 PM

நம்மில் சிலர் வாரம் முழுவதுமே பிரியாணியை கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அதன் சுவை அப்படி. பிரியாணியில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் கூட அதில் சில தீமைகளும் இருக்கிறது.

biryani health

பிரியாணி எந்த அளவிற்கு ஆரோக்கியமான உணவோ அதே அளவிற்கு ஆரோக்கியத்தையும் கெடுக்கும். எல்லாம் நாம் சாப்பிடும் அளவை பொருத்து தான் இருக்கிறது. அதற்கு தான் சொன்னார்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று. தினமும் பிரியாணி சாப்பிடுவது உடல் சம்பந்தப்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

biryani health

நல்ல கொழுப்புகளை போலவே சில தீய கொழுப்புகளும் பிரியாணியில் நிறைந்துள்ளது. பிரியாணி சாப்பிட்ட உடன் மூலிகைத் தேநீர் அல்லது எலுமிச்சை தேநீர் குடிப்பது நல்லது. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இதன் மூலம் கல்லீரல் பாதுகாக்கப்படும்.

biryani health 

இரவு நேரங்களில் நமது உடலில் மெட்டபாலிசம் குறைவாக இருப்பதனால் பிரியாணி போன்ற ஹெவியான உணவுகளை தவிர்த்தல் நல்லது. தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீர் குலைந்து போய்விடும். இதனால் குடல் அழற்சி, இரைப்பை புண்  போன்ற பிரச்சினைகள் உருவாகி விடும்.

மாலை 6 மணிக்கு மேல் முடிந்தவரை கலோரிகள் அதிகமாக இருக்கும் உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது. ஏனெனில் அது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்

biryani health

இரவு நேரங்களில் வயிறு நிறைய சாப்பிடுவது தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் மறுநாள் காலையில் நமக்கு சோர்வை உருவாக்கும். எனவே இரவு நேரங்களில் பிரியாணி, பரோட்டா, நூடுல்ஸ், சிக்கன், தந்தூரி, எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்தல் நல்லது.