Misc

பிரியாணி ஒரு டுபாக்கூரு உணவா? உண்மையை கக்கிய குக் வித் கோமாளி "செஃப்" வெங்கடேஷ் பட்! பிராந்தியும் பிரியாணியும் ஒன்றாமே!

Feb 27 2021 12:59:00 PM

கடந்த 30 ஆண்டுகளில் நம்ம மக்களின் வாழ்க்கை முறை ரொம்பவே மாறிவிட்டது. டீ,காபி, புரோட்டா கொடிகட்டி பறந்த காலம் போய், இப்போ பிரியாணியின் ராஜ்ஜியம் வலுப்பெற்றுவிட்டது. நம்ம ஊருக்கான உணவுகளின் அடையாளத்தை இழந்து, திரும்பிய பக்கம் எல்லாம் பிரியாணி கடை கண்ணில் படும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம். உங்களுக்கு ஒன்னு தெரியுமா? மற்ற உணவுகளை காட்டிலும் பிரியாணிக்கு மட்டும் ஏன் இத்தனை மவுசு என்று யோசித்துப்பாருங்கள்.

biriyani food taste

உண்மையில், பிரியாணியில் கலந்துள்ள எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் ஒருவித ம யக்கத்தைத் தருகின்றன. அந்த ம யக்கத்தில் ஆழ்ந்தவன் வெளியே வர விரும்புவதில்லை. அந்த வகையில் பிராந்தியும், பிரியாணியும் ஒன்றுதான். அடிக்கடி பிரியாணி சாப்பிட தூண்டும் உணர்வு கூட, ஒரு வகை போ தை தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பண்டிகை, விஷேச காலங்களில் சுடப்பட்ட இட்லி எப்படி தினசரி உணவாகிப்போனதோ, அதே போல பிரியாணியை வலிய உள்ளே திணித்துள்ளோம்.

biriyani food taste

விஜய் டீவி குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக வரும் வெங்கடேஷ் பட் ஒருமுறை, பிரியாணியை மிகைப்படுத்தப்பட்ட உணவு என்று கூறியிருக்கிறார். அதில் போடப்படும் மசாலாக்களின் போதையே டேஸ்ட்டுக்கு காரணம். பிரியாணி சாப்பிடுவதால், அதி விரைவில் உடம்பில் கொழுப்பு சத்து அதிகரிக்கும். ஜீரணம் ஆவதை தாமதப்படுத்துகிறது. இரவில் பிரியாணி சாப்பிடுவதால் இரைப்பை ரொம்ப திணறும்னு எனக்கு தெரிந்த டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.

biriyani food taste

ஏதோ கடமைக்காகவும் பெருமைக்காகவும் சாப்பிட்டு கொண்டு இருக்கிறோம். சில இடங்களில் பிரியாணி வாயில் வைத்த உடனே தொண்டையில் விக்கும். ஆனால் அதன் மசாலா வாசத்தை நுகர்ந்து கொண்டே தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்போம். அசைவ வகை உணவின் தனித்தன்மையே,  சமைக்கப்பட்ட இறைச்சியின் மணமும் சுவையும் தான். பிரியாணியில் நீங்கள் பெறுவது, மசாலாவின் நறுமணமும் கொழுப்பின் சுவையும் மட்டுமே. இந்த காலத்திற்கு ஏற்ற இலாபம் கொழிக்கும் வியாபார தந்திரம் பிரியாணி. இதனை உணர்ந்து அளவோடு சாப்பிட்டால் உடம்பு நல்லா இருக்கும். ருசி மப்பில், அளவு இல்லாமல் உள்ளே தள்ளினால், பிறகு உங்க இஷ்டம்.