HotPicks

மின்கம்பத்தில் அமரும்போது இந்த பறவைகளுக்கு மட்டும் ஒன்றுமாவதில்லையே? ஆனால் நாம் தொட்டால் நம்மீது பாய்கிறதே?

Apr 05 2021 09:18:00 PM

ரொம்ப நாளாக ஒரு சந்தேகம், மனிதர்களாகிய நாம் மின்கம்பிகளை தொட்டால் நமது உ டல் மீது மின்சாரம் பாய்ந்து அ திர்ச்சிக்கு உள்ளாகிறோம். ஆனால் பறவைகள் எந்தவித அ ச்சமும் இன்றி, மின்கம்பியில் அமர்கிறது. இருந்தாலும் அவைகளுக்கு எந்தவித பா திப்பும் ஏற்படுவதில்லை.

science-facts electric-science

ஏதோ ஊஞ்சலில் உட்கார்ந்து இருப்பது போலவே, மின்கம்பி மீது அமர்ந்து கொண்டிருக்கும். இந்த பறவைகளை பார்க்கும் போதெல்லாம், இறைவனுக்கு பறவைகள் மீது கருணை அதிகமே என்று எண்ணம் தோன்றும். ஆனால் அறிவியல் எல்லாவற்றிற்கும் ஒரு காரணத்தை வைத்துள்ளது. 

science-facts electric-science

பறவை மின் கம்பியில் அமரும்போது மின்னோட்டமானது பறவை மீது பட்டு மற்றொரு கம்பிக்கு செல்வது இல்லை. பூமியுடன் எந்த தொடர்பும் இல்லாமல் தான் உள்ளது. ஆகாயத்தில் உள்ளதால் தான் பறவைக்கு எந்தவித மின் அ திர்ச்சியும் ஏற்படுவதில்லை. ஏனெனில் பறவை பூமியோடு தொடர்பு இல்லாமல் இருப்பதால் மூடிய சுற்றை அமைப்பதில்லை. மூடிய சுற்றில் தான் மின்சாரம் பாயும். மனிதன் தரையில் நின்றுகொண்டு தொடும்போது, மூடிய சுற்றை ஏற்படுத்துகிறான். அதனால் தான் நம்மீது மின்சாரம் பாய்கிறது. 

science-facts electric-science

இந்த நேரத்தில் நாம் காலணி அணிந்துகொண்டு மின்கம்பியை தொடும்போது, மின்சாரமானது மின்கடத்தா பொருள் மீது பாய்ந்து திறந்த சுற்றை ஏற்படுத்துகிறது. இதனால் மின்சாரம் நமது உடலில் பாய்வது தடுக்கப்படுகிறது. இதுவே பறவை ஒரே கம்பியில் அமர்வதால் தான், மின்னோட்டம் பாய்வது திறந்த சுற்றாக உள்ளது. இதனால் மின்னோட்டம் பாய்வதில்லை. அதுவே இரண்டு கம்பியில் அமர்ந்திருந்தால், மின்னோட்டம் மூடிய சுற்றில் பாய்ந்து பறவையை பொசுக்கிவிடும்.  சின்ன விஷயம் தான் ஆனால் எவ்வளவு பெரிய அறிவியல் புதைந்துள்ளது.