Misc

சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் ஏன் இதுவரை ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபடுவில்லை? மறைந்திருக்கும் தொழில் வித்தை!

Apr 08 2021 05:54:00 AM

இது நாள் வரைக்கும் நான் அறிந்துகொண்ட வரையில் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாமே ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம் கட்டுவதில்லை. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மார்ட் தளம் கூட, அமேசன் போன்ற நிறுவனங்களின் எழுச்சிக்கு பிறகே தொடங்கப்பட்டது. இருந்தாலும், மற்ற நிறுவனங்கள் அளவுக்கு அதில் ஆர்வம் காட்டப்படுவதில்லை. நேரடியாக பொதுமக்களிடமிருந்து நன்கு வருமானம் ஈட்டும் எந்த நிறுவனமும், ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபடுவதில்லை.

shop online sale

உதாரணத்துக்கு தமிழகத்தில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். தினமும் கோடிகளில் பணப்புழக்கம் இருந்தாலும், ஆன்லைன் ஷாப்பிங் பக்கம் அவர்கள் செல்வதே இல்லை. நேரில் வந்து மக்கள் பணத்தை மூட்டை மூட்டையாக கொட்டும் போது, ஏன் மெனக்கெட்டு ரிஸ்க் எடுக்க வேண்டும்? நேரடி வர்த்தகம் என்றால், உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடைக்கு வரும். கடையில் இருந்து கஸ்டமருக்கு செல்லும். அதோடு தொழில் முடிந்தது. பெருசா ரிஸ்க் இல்லை.

shop online sale

இதுவே ஆன்லைன் பிசினஸ் பக்கம் போனால், நிறைய பேரை ஒருங்கிணைத்து வேலை வாங்க வேண்டும். லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து சம்பந்தப்பட்ட பிரிவில் ஆட்கள் நியமிக்க வேண்டும். இரவில் பொருட்கள் எடுத்து கொண்டு செல்ல வேண்டும். பொருட்களை சேமிக்கும் வேர்ஹவஸ் னவக்க வேண்டும். வேர்ஹவஸில் பொருட்கள் பாதுகாப்பு, அதற்கு ஆள் மற்றும் இன்ன பிற செலவுகள்,இடம்,வேர்ஹவஸ் லைசன்ஸ் என்று  செய்ய வேண்டிய விசயங்கள் நீண்டு கொண்டே போகும்.

shop online sale

இதை தாண்டி, வாடிக்கையாளர் பதிவு செய்த பொருளை இருப்பு வைத்து பாதுகாத்தல், அழகாக பேக்கிங் செய்து, பாதுகாப்பாக பெட்டியில் அடைத்து குறிப்பிட்ட கால அளவில் அனுப்பி வைக்க வேண்டும். குறைகள் இருந்தால் மீண்டும் ரிட்டர்ன் எடுக்க வேண்டும். சின்ன 500 ரூபாய் பொருளை விற்பது என்றாலும், ரொம்பவே மெனக்கெட வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதும் கடினம். இத்தனை ரிஸ்க் எடுத்து ஒரு சில ஆர்டர்களை பெறுவதற்கு பதிலாக, நேரடியாக வரும் மக்களிடமே எளிதாக இலாபம் பார்த்துவிடலாம் என்பதால், பெரிய நிறுவனங்கள் ஆன்லைன் பிசினஸ் பக்கம் போக தயங்குகின்றனர்.