Spellbound

#Must Read: உங்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காமெடி படங்கள்!

Feb 13 2020

ஆயிரம் படங்கள் வந்தாலும், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த படங்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. உதாரணத்துக்கு தமிழில் வடிவேலு நடிப்பில் வெளியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தை சொல்லலாம். அது போன்று தமிழ் அல்லாத பிறமொழி படங்களும் வயிறு குலுங்க என்ன, வயிறு வலிக்கவே சிரிக்க வைக்கும். அந்த லிஸ்ட்டை அடுத்து பார்க்கலாம்.

#1. The Gods Must Be Crazy (1980) - ஆப்பிரிக்கர்கள் சம்பந்தப்பட்ட படமிது. ஒரு காலியான கோகோ கோலா பாட்டில்களைப் பார்த்து, அது கடவுளால் அனுப்பப்பட்டது என்று நினைத்துக்கொள்கின்றனர். இப்படி தொடங்கும் படம், போக போக பாட்டிலால் என்ன ஆகிறது என்பதை விளக்குவதே கதை.  தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் கோகோ கோலா பாட்டில் தீங்கானதெனக் கருதி, அவர் உலகத்தின் விளிம்புவரை சென்று அதை கடவுளிடம் திருப்பிக் கொடுக்க திட்டமிடுகிறார். உண்மையில் எல்லோரும் வேடிக்கையான உணர்கிற நல்ல படமிது.

comedy comedy-movie

#2. My Little Bride (2004) - 16 வயது சிறுமியை, 21 வயதான மாமன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் கதை இது. சிறந்த காமெடி படத்தில் இதுவும் ஒன்று. கதை பார்ப்பதற்கு மிகவும் அப்பாவியாக இருந்தாலும், சிரிப்பில் சிலிர்க்க விக்கிரத். இந்தியாவில் கூட இப்போதெல்லாம் விழிப்புணர்வு வந்து, நெருங்கிய உறவினர்களுக்குள் திருமணம் செய்வதில்லை. ஆனால் அதனை மையக்கருவாக வைத்தே திரைக்கதையை நகர்த்தியிருப்பார்கள். எப்போதாவது பார்க்க நேரம் கிடைக்கும் என்றால் இதை தவற விட வேண்டாம்.

comedy comedy-movie

#3. Some Like It Hot (1959) - இந்தப்படம் ஒரு நகரத்தில் இருந்து, மற்றொரு நகரத்திற்கு ரெளடிகளிடமிருந்து தப்பித்து  வரும் இரண்டு பேர் பற்றியது. யாரும் கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காக பெண்ணாக வேடமிட்டு, பெண்களை போலவே உடை உடுத்துகிறார்கள். அழகான பெண் போல மாறியவுடன், பெண்ணாக அவர்கள் சந்திக்கும் சோதனைகள் காமெடியாக மாறுகிறது.

comedy comedy-movie

#Must Read : இந்த மாதிரியான படங்கள் இன்னும் ஏராளம் இருந்தாலும், நம்ம ஊரிலும் பேமஸ்சான படங்கள் இவை. அடுத்த பதிவில் இன்னும் சிறந்த படங்களை பார்க்கலாம்.