Hugs & Kisses

#foreigngroom: அடேங்கப்பா! வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்வதில் இத்தனை நன்மையா?

Feb 14 2020

மகிழ்ச்சியாக ஓடிவந்து தாராவிற்கு வாழ்த்துக்கள் கூறினாள் ஜனனி. ஏதோ ஒன்றை பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தாள் தாரா. 

என்னாச்சு தாரா ! அருமையான இடத்துல வரன் அமைஞ்சுருக்கு, ஏன் இப்படி விசனமா இருக்க? என வினாவ ஆரம்பித்தாள் ஜனனி.

வெளிநாட்டு மாப்பிள்ளையாக இருக்காங்க அதான் 'நோ' சொல்லிடலாமானு  யோசித்துட்டு இருந்தே ஜனனி! என குழப்பமான மனநிலையில் பதில் கூறினாள் தாரா.

வெளிநாட்டு மாப்பிள்ளைய கல்யாணம் செய்துகிட்டா எவ்ளோ பெனிஃபிட்ஸ்னு உனக்கு இன்னும் தெரியல, சொல்றேன் கேட்டுக்கோ! என தாராவிற்கு எடுத்துக்கூற ஆரம்பித்தாள் ஜனனி. 

foreign-groom dream-wedding love marriage

#1. மாமியார், மாமனார், நாத்தனார் என்ற சொந்தங்களின் தொல்லைகள் இருக்கவே இருக்காது. வீட்டுக்கு திடீர் விருந்தாளிங்க வரவே மாட்டாங்க. எங்க வீட்ட எடுத்துக்கோ லீவுவிட்டா போதும் வந்துருவாங்க. 

#2. அடுத்து உனக்கு வெஸ்டர்ன் ஸ்டைல் ட்ரெஸ்களெல்லாம் பிரியம் தானே? அப்போ உனக்கு பிடித்த மாதிரி உடை உடுத்தலாம். அங்கு உன்னை கேள்வி கேட்க யாரும் இருக்க மாட்டாங்க. அந்த ஊரு சீதோஷண நிலைக்கு நீ அதைத்தான் உடுத்தியாகணும். எங்க வீட்ல ஆடை கட்டுப்பாடு இருக்கு. இதெல்லாம் தெரியாம 'நோ' சொல்லிடாத!

#3. அங்க இருக்கிற கம்பெனியில் எல்லாம் கண்டிப்பா லீவு எடுக்கணுமாமே! இங்க மாதிரி பொண்டாட்டி,புள்ளைய விட்டுட்டு வேலையே கதினு இருக்க மாட்டாங்களாம். வேலை செய்யற மனநிலையில இல்லைன்னாவே லீவு எடுத்துக்கலாமாம். செல்லப்பிராணி என்னை மிஸ் செய்துன்னு சொல்லி விடுமுறை எடுத்தவர்கள் கூட உண்டாம்.  உனக்கு உடம்பு சரியில்லைன்னா கூட உன் வீட்டுக்காரர் லீவு போட்டுட்டு பக்கத்திலே இருப்பார்.

#4. நீ நினைக்கிற மாதிரி வெளிநாடு என்றாலே பரபரப்பாகத்தான் இருக்கும்னு நினைக்கிறது தப்பு. ஒரு சில நகரங்கள் தான் அப்படி இருக்குமாம். குடியிருப்பு பகுதியெல்லாம் கிராமம் மாதிரியே அமைதியாகத்தான் இருக்குமாம். வாழ்க்கைமுறை மற்றும் பணம் சம்பாதிக்க மட்டுமில்ல இந்த மன அமைதிக்காக கூட வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்படுபவர்கள் உண்டு.

#5. காதல் இருந்தால் 'ஜில்லுனு ஒரு காதல்' படம் போல கனவு வாழ்க்கை வாழ உனக்கு அங்க  அதிக வாய்ப்புகள் உண்டு.

#foreigngroom, எப்போதும் சொந்தங்களுடன் இருக்கும் போது ஏதோ ஒரு மனக்கசப்பு வரத்தான் செய்யும். கொஞ்சம் தூரமாக இருந்துட்டு, ஒருநாள் நாம் வரும்போது நம்மல கொண்டாடுவார்கள் பாரு அந்த சந்தோஷத்துக்காகவே வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லலாம்.