Misc

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை தட்டிக்கழிப்பதன் காரணம் என்ன? ஆயில்யம் நட்சத்திரம் மாமியாருக்கு ஆகாது எனக்கூறுவதில் உண்மை இருக்கிறதா?

Jan 13 2022 03:34:00 PM

ஜாதகம், ஜோசியம் இதில் முத்திப்போனவங்க சில நட்சத்திரங்களை ஒரேடியாக ஒதுக்கி வைத்து விடுகின்றனர். அதில் ஒன்று தான் ஆயில்யம் நட்சத்திரம். நான்கைந்து வருடங்களாக தேடியும் பொண்ணு செட் ஆகாத ஆண்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். இருந்தாலும் அப்படிப்பட்டவர்கள் கூட ஆயில்யம் நட்சத்திர வரனை வேண்டாம் என்று தான் கூறுகின்றனர். இதற்கு கூறப்படும் மெயின் காரணம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்தால் வீட்டில் பையனின் அம்மாவுக்கு ஆகாதாம்.

ayilyam-star

மருமகளுக்கு ஆயில்யம் நட்சத்திரமாக இருந்தால் அது சில சமயங்களில் மாமியாரின் உ யிரை பறித்து விடும் என்றெல்லாம் தகவல்களை பரப்பி வருகின்றனர் சில முட்டாள்கள். உண்மையில் ஆயில்யம் நட்சத்திரம் ஒன்றும் அவ்வளவு மோ சமான நட்சத்திரம் கிடையாது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ayilyam-star

ராமபிரானின் சகோதரரான லட்சுமணன் அவதரித்த ஆயில்யம் நட்சத்திரம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த நட்சத்திரத்தை எப்படி தோஷம் உள்ள நட்சத்திரம் என்று கூற முடியும். ஆதிசேஷனுடைய அம்சமாக விளங்கும் லட்சுமணன் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். இதை விட இந்த நட்சத்திரத்திற்கு வேறு என்ன சிறப்பு வேண்டும் சொல்லுங்க.

ayilyam-star

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை மணமுடித்துக்கொள்வதால் மாமியாருக்கு எந்த தீங்கும் வராது. மருமகள் கணவன் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருப்பாள். கணவனுக்கு மட்டுமே முதலிடம் கொடுப்பாள். மாமியாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க மாட்டாள். இது ஆயில்யம் மட்டுமல்ல அனைத்து நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கும் இருக்கும் இயற்கையான குணம். மாமியாரை மதிக்காமல் நடந்துகொள்வதால் மாமியார் மருமகள் ச ண்டை வரலாமே தவிர அதற்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனவே பெண் பார்க்கும் போது ஆயில்யம் நட்சத்திரத்தை தேவையில்லாமல் ஒதுக்காதீர்கள்.