HotPicks

ஏலே! எலியே! இருக்குடியோவ் உனக்கு! ஒரு வாரம் காரை எடுக்காமல் நிறுத்தி வைத்திருந்தால், உள்ளே புகுந்து நாசம் செய்துவிடுகிறது! 10 ரூபாயில் விரட்டியடிக்கும் பக்கா டிரிக்!

May 15 2021 01:45:00 PM

ஒரு வாரம் சேர்ந்த மாதிரி கார் வீட்டுக்கு வெளியே நின்றால் போதும், அடுத்து ஏதாவது அவசரத்துக்கு எடுத்துட்டு போலாம்னு பார்த்தால், ஹாரன் அடிக்காது. அது நல்லா இருந்தா லைட் எரியாது. இந்த எலி தொல்லை என்ன செய்தும் போகவில்லை. இதற்காக, கார் நிறுத்தும் இடத்திலிருந்த புதரை சுத்தம் செய்து, காருக்கு அடியில் எலிப்பொறியும் வைத்து பார்த்துவிட்டேன். எதற்கும் அசைவது போலத்தெரியவில்லை. ஆன்லைனில் எலி விரட்டி மருந்து விற்கப்படுவதாக கேள்விப்பட்டேன்.

car rat engine

சரி அதையாவது வாங்கி பயன்படுத்தலாமெனப் பார்த்தால், இப்போ ஆன்லைனில் ஆர்டர் போடும் எதுவும், டெலிவரி பண்ணக்கூடாதாம். எவ்வளோ நாளுக்கு இந்த தடை இருக்குமென தெரியவில்லை. அதுவரைக்காவதும் கார் நல்லா இருக்கணும்ல. என்ன பண்ணலாம்னு நண்பர்களிடம் ஆலோசனை கேட்டதில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொன்னாங்க. சிலர் மிளகு எண்ணெய் வாங்கி காருக்குள் தெளித்தால், எலி வராதுன்னு சொன்னாங்க. அது ரொம்ப காஸ்ட்லியான ஐடியாவாக தோன்றியது.

car rat engine

எல்லோரிடமும் விசாரித்துப்பார்த்ததில், பு கையிலையை, என்ஜின் பகுதியில் கட்டி வைத்தால் எலிகள் காருக்குள் வராது என்று எங்கள் மெக்கானிக் கூறியுள்ளார். நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் புகை இலையை காருக்குள், என்ஜின் பகுதியில் வைத்தால் எலிகள் வராதாம். இன்ஜின் கம்பார்ட்மெண்டில் சில துண்டு புகையிலையும், பேட்டரி பகுதியில் சில துண்டுகளும் வைத்த பின் எலித்தொல்லை நின்றுவிட்டது. மாதத்துக்கு ஒருமுறை புதிய புகையிலை மாற்றுவது நல்லதுன்னு கேள்விப்பட்டேன்.

car rat engine

ஆனால் ஒரே முன்னெச்சரிக்கை என்னவென்றால், அடுத்த முறை காரை திறக்கும்போது புகையிலை வாடை குமட்டும். காரை திறந்து சிறிது நேரம் கழித்து உள்ளே அமரவேண்டும். ஆரம்பத்தில் காருக்கு உள்ளே ஹிட் மருந்து அடித்துக்கொண்டிருந்தோம். காருக்கு அடியில்  என்ன செய்தாலும் எலித்தொல்லை மட்டும் போகவே இல்லை. மெக்கானிக் சொன்ன புகையிலை ஐடியா நல்ல பலன் கொடுக்கிறது. முடிந்த வரையில் காருக்குள் உணவு பண்டங்கள் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சுத்தமாக துடைத்துவிட்டாலும், அதன் வாசத்திற்கு எலிகள் எட்டிப்பார்க்கும்.