Out of Box

எதற்கு இந்த வயிற்றெ ரிச்சல்? க க்கூஸ் வீடியோ என்றால் குறைச்சலா? வாயை பிளந்து கொண்டு பார்த்தீங்களே? போடும் வீடியோவை பார்த்துவிட்டு போக வேண்டியது தானே?

May 13 2021 04:23:00 PM

இந்த லாக்ட வுன் காலத்தில், ஷோக்கள் இல்லாத காரணத்தால், ஷூட்டிங் இல்லாத பிரபலங்கள் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அன்றாடம் தாங்கள் செய்யும் வேலைகளை, தங்களது வீட்டில் உள்ள பொருட்கள் எங்கு எப்போது வாங்கினார்கள் என்பதை பற்றி ஒரு முழத்திற்கு வீடியோ போடுகிறார்கள். 

archana-bathroom-tour archana-vj

சமீபத்தில் ஒரு நடிகை, தனக்கு பே தி ஆனதை கூட பெரும் விமர்சைக்கு உண்டான விஷயம் போல பகிர்ந்துகொண்டார். அதையும் 60 லட்சம் பார்த்துள்ளார்கள். என்னதான் பார்த்துவிட்டு திட்டினாலும் பார்க்கிறார்கள், இல்லையா? நெட்டிசன்கள் திட்டுவதால், பிரபலங்கள் பதிவிடும் வீடியோக்களுக்கு வரும் வருமானம் என்ன குறைந்தா விடுகிறதா? 

archana-bathroom-tour archana-vj

சமீபத்தில், பிரபல சேனலில் கலகல தொகுப்பாளினியாக உள்ள அர்ச்சனா பற்றிய ட்ரோல் வீடியோக்கள் தான் சில நாட்களாக இணையத்தில் உலாவி கொண்டிருக்கிறது. 'பாத்ரூம் டூர்' என தன்னுடைய பாத்ரூமை சுற்றிக்காட்டும் வீடியோவை தன்னுடைய சேனலில் பதிவிட்டார். பாத்ரூமில் பெரிதாக என்ன இருக்க போகிறது? என இந்த வீடியோவை பார்த்தவர்களே 30 லட்சம் பேர். வீடியோவை பார்த்தவர்களில் பாதி பேர் அந்த பாத்ரூமை வியந்து பார்த்திருப்பார்கள். ஏனெனில் பலருக்கு அர்ச்சனா வீட்டு பாத்ரூம் தான் தங்கும் அறையாக இருக்கும். 

archana-bathroom-tour archana-vj

வீடியோவின் ஆரம்பத்தில், பாத்ரூமை எப்படி மெயின்டைன் செய்து கொண்டிருக்கிறேன் என இந்த வீடியோவில் பார்க்கலாம் என்றவர், ஒரு இடத்தில் கூட பாத்ரூமை மெயின்டைன் செய்யும் டிப்ஸை கொடுக்கவில்லை. வீடியோ முழுக்க பாத்ரூமின் ஆடம்பரம் தான் கண்ணை பறிக்கிறது. தன்னுடைய ஆடம்பரத்தை காட்டவே வீடியோ போட்டது போல் தெரிகிறது. பார்ப்பவர்கள், 'ஐயோ நம்மால் இதையெல்லாம் பார்க்க மட்டும் தானே முடிகிறது?' என பலர் தங்களுடைய இயலாமையை நினைத்து புழுங்குகின்றனர். அதன் பாதிப்பு தான் அர்ச்சனா பற்றிய இத்தனை ட்ரோல் வீடியோக்கள்.

archana-bathroom-tour archana-vj

கொ ரோனா வந்து மக்கள் எல்லோரும் ப யந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், இவர்களுக்கு பாத்ரூம் டூர் அவசியமா? பணம் சம்பாதிப்பதற்கு நிறைய வழி இருக்கிறது. பாத்ரூம்ல டூர் போக என்ன இருக்கு? அநியாயம் பணப்பேராசை மனிதனை எவ்வளவு இழிவாக யோசிக்கவைக்கிறது? பாத்ரூம் டூர் வீடியோவால் பல அதிருப்திகளை சம்பாதித்துவிட்டார் அர்ச்சனா. பொது தளத்திற்கு வந்தாயிற்று, இனி எல்லாத்தையும் பொறுத்துக்கொள்ள தான் வேன்டும். இனி இன்னும் எத்தனை ட்ரோல் வீடியோக்கள் வருமோ? வியூஸ் வரவேண்டி கையில் எடுத்த வியூகம் இப்படி வீணாபோயிற்றே? 

archana-bathroom-tour archana-vj

பட வாய்ப்பு இல்லாத நடிகைகள், குழந்தை பிர சவித்துள்ள நேரத்தில் வருமானம் இல்லாத நடிகைகள், பழைய காலத்து நடிகைகள், சீரியல் நடிகைகள் என சில பிரபலங்கள் சும்மா இல்லாமல் வருமானத்திற்காக யூடியூபில் சேனல் ஒன்றை வைத்துக்கொண்டு, அன்றாடம் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் வீடியோவாக போட்டுக்கொண்டிருக்கிறார்கள். பிரபலம் என்றாலே எங்கிருந்து தான் லட்ச கணக்கான ஃபாலோயர்கள் வருவார்களோ? வீடியோ பார்க்கும் நம்மையும் காசிற்காக க ழிவறையை எல்லாம் வீடியோ எடுத்து போடும் அவர்களையும் எங்கோ இருக்கும் ஒருவன் ஆட்டிபடைத்து கொண்டிருக்கிறான். 

archana-bathroom-tour archana-vj

அரசுவேலைக்கு படித்துக்கொண்டிருந்த நண்பர், பகுதிநேர வேலையாக யூடியூப் சேனல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நல்ல வருமானம் வருகிறதே என இப்போது முழுநேர வேலையாக யூடியூப் சேனல் பணியையே தொடர்கிறார். அவனது கனவு என்னாவது? முடிந்தவரை உபயோகமான வீடியோ என்றால் பாருங்கள், பகிருங்கள். ஏனெனில் காசை காட்டி, நமது அறிவை செல்போனோடு நிறுத்திவைக்க முயல்கிறார்கள்.