Around me

ஆப்பிள் கேட்டதற்கு ஆப்பு வெச்சிட்டீங்களே. விளம்பரத்தை சரியாக கவனிக்காமல் ஆர்டர் செய்தால் இப்படி தான் நடக்கும்.

Mar 29 2021 09:37:00 AM

விலைமதிப்பு மிக்க ஒரு பொருளை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. அதுவும் ஆப்பிள் ஐபோன் குறைந்த விலை என்றால் சொல்லவேண்டுமா என்ன? அப்படித்தான் தற்போது தாய்லாந்து நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான இணையதளத்தில் ஆர்டர் செய்து ஏமாந்து போயுள்ளார். குறைந்த விலையில் ஆப்பிள் போன் வாங்க ஆசைப்பட்டு கடைசியாக ஆப்பிள் வடிவத்தில் இருக்கும் காபி டேபிள் வாங்கியுள்ளார்.

apple-table

நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த அவர் ஒரு போலியான இணையதளத்தில் குறைந்த விலையில் ஆப்பிள் போன் என்ற விளம்பரத்தை பார்த்து ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அதை டெலிவரி வாங்கிய பிறகு பிரித்து பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆப்பிள் போனுக்கு பதிலாக ஆப்பிள் வடிவ காபி டேபிள் அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது.

apple-table

பின்னர் அவர் அந்த இணையதளத்தை ஆராயும்போது தான் தவறுதலாக அவர் இந்த பொருளை ஆப்பிள் போன் என்று எண்ணி ஆர்டர் செய்தது தெரிய வந்தது. விவரங்களை சரிபார்க்காமல் ஐபோன் என்று எண்ணி ஏமாந்து விட்டார். ஆன்லைனில் ஆர்டர் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் போலியான இணைய விளம்பரத்தை நம்பி ஏமாறுவது தான் மிஞ்சும். சுதாரித்துக்கொள்ளுங்கள் இளைஞர்களே.