Misc

சென்னை, கோவை மாதிரியான நகரங்களில், ஏற்கனவே பயன்படுத்திய அப்பார்ட்மென்ட்களை வாங்குவது நல்லதா? சொந்த வீடு ஆசையில், ஆசாமிகள் சொறுகும் ஆப்பு!

May 15 2021 02:45:00 PM

சென்னை, கோவை போன்ற நகரங்களில், நிலம் விற்கும் விலைக்கு தனி வீடு வாங்குவதெல்லாம், நடுத்தர மக்களுக்கு கனவாகிவிட்டது. சிட்டிக்கு அவுட்டரில் வேண்டுமானால், நாம் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் வீடு வாங்கலாம். பட்ஜெட் போட்டுக்கொண்டு சிட்டிக்குள் வீடு தேடினால், ரொம்ப கஷ்டம். இதற்கு பயந்தே, பெரும்பாலான மக்கள், கைக்கு கட்டுபடியாகும் ரேட்டில் பிளாட் கிடைத்தால் வாங்கிக்கொள்கின்றனர். அந்த ஊரில் எவ்வளோ நாள் பணியாற்ற முடியுமோ, அவ்வளவு நாள் பயன்படுத்திக்கொள்கின்றனர். 

aprtment chennai Coimbatore

பிறகு வேறு ஊருக்கு மாற்றலாகி செல்லும் போது, வீட்டுமனை விற்பனை செய்வது போல விற்றுவிடுகின்றனர். வீட்டுமனைக்கு பத்திரப்பதிவு செய்வதைப்போல நடைமுறை இதில் கிடையாது. ஒப்பந்த முறையில் வெறும் டாக்குமெண்டுகள் மட்டுமே பேசும். விவரம் தெரிந்த ஒருவரை உடன் வைத்துக்கொண்டு, ஏற்கனவே பயன்படுத்திய பிளாட்களை வாங்கலாம். கட்டிடத்தின் உறுதித்தன்மை, இன்னும் எவ்வளவு நாட்கள் பயன்பாட்டில் இருக்கும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

aprtment chennai Coimbatore

அதனை, தகுந்த அனுபவமுள்ள கட்டிட வல்லுநரின் ஆலோசனை பெற்று முடிவு செய்யலாம். கட்டிடத்தின் தன்மையை ஆவணங்கள் மூலம் அறிய முடியாது. ஏனென்றால் கட்டிடத்தின் பராமரிப்பு பயன்படுத்திய பொருட்கள், கட்டுமான முறை போன்றவைதான் அதன் உறுதித்தன்மையை சொல்லும். ஆவணங்கள் வயதை மட்டும்தான் குறிக்கும். நல்ல முறையில் கட்டப்பட்ட கட்டிடங்கள், சரியான பராமரிப்பு இல்லாமல் விரைவில் பழுதடைவதை பார்த்துள்ளேன். அதே சமயம் பல வருடங்கள் பழமையான கட்டிடம் உறுதியாக உள்ளதும் உண்டு.

aprtment chennai Coimbatore

அபார்ட்மென்டை விற்பவர் அதை எதற்காக விற்கிறார் என்பதை விசாரிக்க வேண்டும். சிலர் காற்றோட்டமின்மை, போதிய வெளிச்சமின்மை, மழைநீர் உள்ளே வருதல் போன்ற காரணங்களுக்காக விற்பதை பார்த்திருக்கிறேன். அந்த மாதிரியானவற்றை வாங்காதீர்கள். நீங்கள் வாங்க உள்ள அபார்ட்மென்டின், ஒவ்வொரு அறைக்கும் சீலிங் எப்படி இருக்குன்னு நன்றாக கவனித்துப் பாருங்கள். அதில் நீர்க்கசிவு ஏதேனும் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். சில ஆட்கள், உள்ளே ஏதாவது குறை இருப்பது தெரிந்தவுடன், அடுத்தவர் தலையில் கட்ட பார்ப்பாங்க. எதற்கும் எச்சரிக்கையா இருங்க.