Out of Box

#Media: சொம்பு மீடியாக்களுக்கு ஆப்படித்தாரா அண்ணாமலை? முறியடிக்கப்படாத ரஜினியின் சக்கரவியூகம்! 234 தொகுதிகளிலும் தலைவரின் சீக்ரெட் புரொஜெக்ட்!

Aug 29 2020 02:44:00 PM

தமிழ் மீடியாக்களின் போக்கை கவனித்தால், சீசனுக்கு ஏற்ற மாதிரி பிசினஸ் செய்வது கண்கூடாகத் தெரியும். தேர்தல் நேரம் வந்துவிட்டால், தாங்கள் சொம்படிக்கும் கட்சிக்கு எதிராக நிற்பவரின் பிம்பத்தை உடைப்பதும்; கூட்டல், கழித்தல் கணக்கே தெரியாதவருக்கு, கணிதமேதை இராமானுஜன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பதும் தான் வழக்கம். தகுதியால் வளர்ந்த ஒருவரை, தராதரம் பார்த்து இறக்கி பேசும் வித்தையை, இந்த மீடியாக்களை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். விஜயகாந்த் என்ற அருமையான மனிதரை, டம்மியாக்கி முடக்கியதில் முக்கிய பங்கு மீடியாக்களுக்கு உண்டு.

rajini annamalai bjp

கம்பெனி அரசியல் செய்பவர்களையும், கட்சி தொண்டர்களை கொத்தடிமைகளாக பார்ப்பவர்களையும் மகானாக சித்தரிக்கும் அவர்கள், ஒருவர் நல்லது செய்ய வேண்டும் என்று களத்திற்கு வந்தால், சம்பந்தமே இல்லாத பழியை சுமத்தி, வளர விடாமல் செய்வதே வேலையா போச்சு. சமீபத்தில் கண்கொத்தி பாம்பாக காத்திருந்த மீடியாக்களுக்கு தோதாக சிக்கியிருப்பது ஐ.பி.எஸ் அண்ணாமலை தொடர்பான டாபிக். தன்னுடைய ஐ.பி.எஸ் வேலையை துறந்துவிட்டு, அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்று சொன்னவரை, ரஜினியுடன் கோர்த்துவிட்டு குளிர்காயப்பார்த்தனர் இந்த மீடியாக்கள்.

rajini annamalai bjp

ரஜினியின் அடுத்த முதல்வர் வேட்பாளரா அண்ணாமலை.? என்பது தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட். சொல்லி வைத்தது போலவே, ஒரு கட்சி சார்ந்த ஊடகங்கள் எல்லாம், ஒரே நேரத்தில் இது குறித்து பேச ஆரம்பித்தன. அண்ணாமலையை அழைத்து பேட்டியும் எடுத்தனர். முன்னர் ஒரு பேட்டியில் மோடியை பிடிக்கும் என்று அண்ணாமலை கூறியிருந்தார். அதனை வைத்து, "ரஜினியின் முதல்வர் வேட்பாளர் மோடியை பிடிக்கும் என்று கூறினால், ரஜினியும் பாஜக தான்" என்கிற மாதிரியான பிம்பத்தை கட்டமைக்க வேண்டும் என்பது தான், அவர்களுடைய திட்டம்.

rajini annamalai bjp

ஆனால், எந்த இடத்திலும் அண்ணாமலையை முன்னிறுத்த போவதாக ரஜினி அறிவிக்கவில்லை. ஊடகங்களின் பசிக்காக உருவானதே இந்த சர்ச்சை எல்லாம். ரஜினிக்கு களங்கத்தை ஏற்ப்படுத்த முயன்ற சொம்பு ஊடகங்களுக்கு, அண்ணாமலை பாஜகவில் இணைந்த சம்பவம் நெத்தியடியாக மாறியிருக்கிறது. இனி புது ஐடியா கண்டுபிடித்து, வேறு எந்த வகையில் காசு கொடுக்கும் முதலாளிக்கு விஸ்வாசமாக நடக்கலாம் என்ற யோசனையில் மூழ்கிவிட்டனர்.

rajini annamalai bjp

நல்ல ஒரு அரசியல் தலைவனுக்கு தேவை நிதானம். அந்த விஷயத்தில் ரஜினியிடம், யாரும் சமரசம் செய்துகொள்ள முடியாது. இவர் என்னடா கட்சி ஆரம்பிக்காமல், காலம் தாழ்த்தி வருகிறார் என்ற விமர்சனங்களை பரவலாக கேட்க முடிகிறது. எதையும் சொல்லிவிட்டு செய்வதில்லை ரஜினியின் பாலிசி, செய்து முடித்த பின்னர் ஒரு நாள் நமக்கே தெரிய வரும். உலகம் முழுக்க பெரிய நெட்வொர்க்கே ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்காக, பின்னணியில் இயங்கி வருகிறது.

rajini annamalai bjp

மக்கள் நல திட்டம், கட்சி கட்டமைப்பு, சமுதாயத்தின் அடிவேரில் இருந்து மாற்றம் கொண்டு வருவதற்கான ஐடியாக்கள், தொழில்நுட்ப அணி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அணி என்று ஏகப்பட்ட வேலைகள் பின்னணியில் நடப்பதாக தெரிய வந்துள்ளது. இத்தனை முயற்சிகள் நடந்தாலும், கட்சி ஆரம்பிக்க இவ்வளவு செய்கிறேன் என்று, எந்த இடத்திலும் ரஜினி மார்தட்டிக்கொள்ளவில்லை. ஒரு அண்ணாமலை பாஜக பக்கம் சென்றாலும், 234 தொகுதிகளுக்கும் 234 அண்ணாமலை போன்ற இளைஞர்களை முன்னிறுத்தும் அளவுக்கு பக்கா பிளான் ரெடி.

rajini annamalai bjp

வேட்பாளர்களை நிறுத்திவிட்டு, தேர்தலில் வெற்றி பெறுவதோடு தன்னுடைய கடமை முடிந்துவிடக்கூடாது என்று நினைக்கும் ரஜினி, ஒவ்வொரு தொகுதியிலும், அடிவேர் நுனி வரை அலசி ஆராய்ந்து, இந்திய அரசியலமைப்பு சட்டம் எப்படி பல நாடுகளின் முன்மாதிரியாக உருவாக்கப்பட்டதோ, அதனைப் போல உலக நாடுகளின் சிறப்பான கூறுகளை எடுத்து, அதனை ஒருங்கிணைத்த வடிவில், தமிழகத்திற்கு என்ற மாற்றித்தர வேண்டும் என்றே இலக்கோடு செயல்பட்டு வருகிறார்.