Out of Box

எல்லை மீறி போகும் அண்ணாமலையின் பேச்சுக்கள் : தேர்தல் முடிவு எப்படி வருமோ என்ற ப யத்தில் பாஜக.

Apr 03 2021 04:24:00 PM

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது IPS பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழ்நாடு வந்து ஐக்கியமானவர் அண்ணாமலை. ஆரம்ப காலகட்டங்களில் இவரைப் பற்றிய நல்ல செய்திகளே வெளிவந்தன. எப்போது அவர் பாஜக கட்சியில் இணைந்தாரோ அன்று முதலே அவரை பற்றி அனைவரும் விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

senthil balaji annamalai kanimoli bjp speech

பாஜக கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் அவர் தனது சொந்த ஊரான அரவக்குறிச்சியில் பாஜக சார்பாக போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளப்பட்டி பகுதியில் வாக்கு சேகரிக்க செல்லும்போது அங்கு இருந்த சில முஸ்லீம் மக்கள் அவரை வாக்கு சேகரிக்க இங்கே வரக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த அவர், நான் ஒரு இந்திய ஜனநாயக நாட்டின் பிரதிநிதி. என்னை வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று சொல்ல நீங்கள் யார் என்பதைப் போன்று பேட்டியளித்தார்.

senthil balaji annamalai kanimoli bjp speech

அண்மையில் அரவக்குறிச்சியில் வாக்கு சேகரித்த அவர், திமுக கட்சியின் செந்தில் பாலாஜி குறித்து க டுமையாக விமர்சனம் செய்தார். அ ராஜகம் செய்யும் செந்தில் பாலாஜியை தூக்கி போட்டு மிதித்தால் ப ல் உ டைந்து விடும், நீங்கள் பார்ப்பது அமைதியான அண்ணாமலையை, எனக்கு இன்னொரு முகம் இருக்கு, கர்நாடக முகம் என்று கூறியிருந்தார்.

senthil balaji annamalai kanimoli bjp speech

இதை கேட்ட கனிமொழி, செந்தில் பாலாஜி அல்ல, உங்களால் முடிந்தால் எங்கள் திமுக கட்சியின் தொண்டன் மீது கை வைத்துப்பாருங்கள் தம்பி என்று விமர்சனம் செய்திருந்தார். இன்று மீண்டும் அண்ணாமலை திமுக குறித்து விமர்சனம் செய்துள்ளார். நாங்கள் நேர்மையான அகிம்சையான வழியில் செல்கிறோம். நீங்கள் அ ராஜகம் செய்து எங்களிடம் பிரச்சனை செய்தால், எங்கள் மீது கை வைக்க வேண்டும் என்று நினைத்தால் நாங்களும் பதிலடி கொடுப்போம், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று கூறியுள்ளார்.

senthil balaji annamalai kanimoli bjp speech

அண்ணாமலையின் பேச்சுக்கள் தொடர்ந்து ச ர்ச்சையை கிளப்பி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள். செந்தில் பாலாஜி போட்டி இடுவது கரூர் தொகுதியில், பிறகு ஏன் இவர் தேவை இல்லாமல் செந்தில் பாலாஜி பற்றி பேசுகிறார் என்று பாஜக கட்சி தொண்டர்களே ஷாக் ஆகி உள்ளனர்.

senthil balaji annamalai kanimoli bjp speech