HotPicks

'என்ன குழம்பு வைக்கலாம்?' - யோசிக்கும் நேரத்தில் ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு ரெடி!

Feb 03 2020

சமையல் கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள், வயிற்றையும் கையில் உள்ள காசையும் பாதிக்காமல் வாழ நினைக்கும் பேச்சிலர்கள்,மனைவி ஊருக்கு போனாலும் ஸ்விக்கி, சோமோட்டோவை நாடாதவர்கள் என அனைவருக்கும் இந்த பதிவு கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும். மேற்கண்ட லிஸ்டில் உள்ள எல்லோருக்கும் சாப்பாடு வைப்பதென்பது பெரிய டாஸ்க்காக இருக்காது. ஆனால் குழம்பு என்ன வைக்கலாம் என திங் பண்ணி தீர்மானம் எடுப்பதற்குள் காலை போய் மதியம் வந்துவிடும்.

இந்த நேரத்தில் பெரும்பாலான சமையல் பிகினர்ஸ் கண்டிப்பாக பாகற்காயை விரும்ப மாட்டார்கள். ஆனால் பாகற்காய்க்கு  விதிவிலக்கான டிஷ் "ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் குழம்பு".  நீங்க சமைத்ததும் சும்மா கல்யாண வீட்டு வெண்டைக்காய் புளிக்குழம்பு அளவிற்கு டேஸ்ட்  அள்ளும்..

தேவையான பொருட்கள்:
பாகற்காய் - 5
வரமிளகாய் 4
வெங்காயம் - 2
தக்காளி சாறு - கால் கப் 
மல்லி - ஒரு சிட்டிகை 
சீரகம் -ஒரு சிட்டிகை 
எள் - ஒரு சிட்டிகை 
எண்ணெய் - தேவையான அளவு
இஞ்சி அரைத்தது- 4 சிட்டிகை 
நாட்டுசர்க்கரை - 2  சிட்டிகை 
 புளிச்சாறு - 2  சிட்டிகை 
உப்பு   - தேவையான அளவு 

செய்முறை:

#1. பாகற்காயை சிறுசிறு துண்டாக்கி, அதில் உப்பு போட்டு ஊறவைத்து, கால்மணிநேரத்திற்கு பிறகு  காயை கழுவி எடுத்து வைத்துக்கொள்ளவும். 

#2. பிறகு ஒரு வாணலியில் சீரகம்,மல்லி,எள்,வரமிளகாய் இவற்றை பொன்னிறமாக வறுத்து , இந்த கலவையில் தண்ணீர் ஊற்றாமல் மிக்சியில் பொடியாக அரைத்து தனியாக வைத்து கொள்ளவும். 

#3. அடுத்து வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு, அதில் நறுக்கி வைத்த பாகற்காய் பொன்னிறமாக வரும்வரை வதக்கவும். பின்னர் இதில் நறுக்கி வைத்த வெங்காயத்தையும் நான்கு நிமிடம் வதக்கவும். 

#4. அடுத்த ஸ்டெப் தான் மிகவும் முக்கியமானது. வதக்கிய கலவையில், இஞ்சி பேஸ்ட்டை சேர்த்து கிளறியதும் அதில் தக்காளி சாற்றை ஊற்றி கொதிக்கவிட வேண்டும். 

#5. இறுதியாக மிச்சம் உள்ள அரைத்துவைத்த பொடி, நாட்டுச்சர்க்கரை, புளிச்சாறு,தேவையான அளவு தண்ணீர் இவற்றை எல்லாம் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிட்டால் ஆந்திரா பாகற்காய் குழம்பு ரெடி.

உப்பிட்டவரை உள்ளவும் நினைக்க வேண்டும். அதற்காக உங்களையே நினைக்க  வைத்துவிடாமல் தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்துவிட்டால் டிஷ் மாஸ் தான். சுடு சாப்பாட்டுக்கு பாகற்காய் குழம்பு ஊற்றி ஒரு உருண்டை எடுத்து வாயில் போட்டால், நாடி நரம்பெல்லாம் ஆந்திரா தான்.#PallipalayamChicken: பள்ளிபாளையத்துக்காரங்க கைபக்குவம்! ஊறுகாய் அளவு கறிக்கு ஒரு குக்கர் சாப்பாடும் காலி..!

 

Top