Misc

பனங்கள்ளு தி ருட்டு போகாமல் இருக்க, பானையில் ஊமத்தம் பொடி! உ யிரை எல்லாம் எடுக்காது, விடிந்த உடனே காட்டிக்கொடுத்துவிடும்! வாயை திறக்க முடியாமல் எவன் சுற்றுகிறானோ அவன்தான்!

Feb 28 2021 01:43:00 PM

ஊமத்தம் செடியின் ஒன்றிரண்டு இலைகளை பறித்து வந்து, அதனை அடுப்புக்கரியோடு சேர்த்து கல்லில் வைத்து மைபோல் நைத்து எடுத்த கலவையை, வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் நன்றாக தேய்த்துவிடுவோம். இப்படி தேய்க்கும்போது, கரும்பலகை புதிதாக மாறிவிடும். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த வேலையை செய்வதுண்டு. அந்த காலத்தில் பள்ளி கரும்பலகைக்கு அடிக்கடி எல்லாம் பெயிண்ட் அடிக்க மாட்டார்கள். நாங்களே ஊமத்தம் இலையை கொண்டு பெயிண்ட் அடித்து கொள்வோம். அப்போது அந்த இலையை பறிக்க செல்லும்போது, வாத்தியார் சொல்வார் 'ஊமத்தம் இலையை தெரியாம  வாயில வச்சுடாதீங்கடா, ஊ மையாகிடுவீங்க' என்பார். ஊமத்தம் பூவை சாப்பிட்டால் ஊ மையாகி விடுவோம்டா! என நாங்க பேசிக்கொள்வோம். 

funny-stories Jimsonweed

ஏனெனில் தற்கொ லை செய்ய நினைப்பவர்கள் கிராமத்தில் ஊமத்தம் செடியின் இலை, பூவை சாப்பிட்டு இ றந்து விடுவார்கள், அதனால் மாணவர்களாகிய நாங்கள் யாரும் இதனை த ற்கொ லைக்கு பயன்படுத்த கூடாது என்பதற்காக தான் 'ஊமத்தம் உண்டால் ஊ மையாகி விடுவோம்' என கிராமத்து பக்கம் கூறுகிறார்கள். 

funny-stories Jimsonweed

இது இல்லாமல் சா ராயத்தில் போ தையை அதிகரிக்க, ஊமத்தம் காயை பொடியாக்கி கலந்துவிடுவார்கள். அதேபோல் அந்த காலத்தில் க ர்ப்பிணி அம்மாக்களுக்கு  ம யக்கம் ஏற்படுத்த இந்த ஊமத்தம் காயை பயன்படுத்துவார்கள். இதுமட்டுமின்றி தலையில் பே ன், பொ டுகு போக ஊமத்தம் இலையை தலைக்கு தேய்த்து குளிக்க நி வாரணம் கிட்டும். இந்த பூவின் இலையையோ பூவையோ உண்ணும்போது, மூ ளையில் ஒருவித பாதிப்பை ஏற்படுத்தி பி த்து பிடித்தது போலவே இருக்க செய்யும். அதனால் தான் இதனை சா ராயத்தில் கலக்க செய்வார்கள். 

funny-stories Jimsonweed

இதற்கு ம ருந்தும் உள்ளது. ஊமத்தம் பூவை தினமும் இரவில் ஊறவைத்து, அந்த நீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குளிர்த்துவர, ஊமத்தால் ஏற்பட்ட பி த்து தெளியும் என்பார்கள். முள்ளை முள்ளால் எடுப்பது போல்தான்.  பனங்கள்ளிற்கு அரசு அனுமதி கொடுத்த காலத்தில், பனைமரத்தில் கள்ளு தொடர்ந்து தி ருட்டு போய் கொண்டே இருக்குமாம். அப்போது அந்த கள்ளு வியாபாரி என்ன செய்வாராம், ஊமத்தம் காயை பொடியாக்கி கள்ளு பானையில் போட்டுவிடுவாராம். இதனை குடிக்கும் தி ருட்டு குடிகாரர்கள், ஒருவாரம் பி த்து பிடித்து சுற்றுவார்களாம். வைத்தியரிடம் காட்ட வைத்தியர் என்ன பி ரச்சனை என சொல்லி, ஊமத்தம் பூவை நீரில் ஊறவைத்து ஒருவாரம் குளிக்க சொல்வாராம். இந்த கள்ளை குடித்து இ றப்பவர்களும் உண்டாம். ஆனால் ஊமத்தம் உண்டால் ஊ மையாகி விடுவோம் என சொல்வது உண்மையல்ல!