Hugs & Kisses

#Wife: கணவனிடம் மனைவி எதிர்பார்க்கும் அந்த 3 விசயங்கள் என்ன தெரியுமா? ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த உணர்வு இருக்குமாம்!

Aug 01 2020

என் தோழிகளின் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் எடுத்து பார்த்தால், வாரம் ஒருவராவது, "அன்பு ஒன்று தான் அனாதை" என்று வைப்பதை அடிக்கடி காண நேர்கிறது. அவங்களுக்கு என்னங்க பிரச்சனை? ஆ! ஊன்னா! இப்படி ஸ்டேட்டஸ் வைக்கிறதே வேலையா போச்சு என்று சில நேரங்களில், எனக்கு கோவம் கூட வந்திருக்கு. அவர்கள் நிலையில் இருந்து யோசித்து பார்த்தால், எவ்வளவு மனவேதனையுடன் அப்படி வைக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. ஆண் மகனின் பண்புக்கு ஏங்கும் பெண்களை விட, அன்புக்கு ஏங்கும் பெண்களே அதிகம்.

husband wife life

ரவுடி மாதிரி இருக்கும் பையனைக்கூட ஒரு பெண்ணுக்கு பிடிக்கிறது என்றால், அவன் பண்பை தாண்டி, அங்கு அன்பு விளையாடுகிறது. எல்லாப் பெண்களும் திருமணத்திற்குப் பிறகு கணவர் எல்லா வகையிலும் தனக்கு தனி முக்கியத்துவம் தர வேண்டும் என்பது மட்டுமின்றி, எல்லா நேரங்களிலும் தனக்கு அரவணைப்புடன் ஆதரவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கு முக்கிய காரணம், திருமணத்திற்குப் பிறகு, மனைவியானவள் தன்னையும், தனது வாழ்க்கையையும் கணவனிடம் முழுவதுமாக ஒப்படைக்கிறாள்.

husband wife life

மனைவிக்கு முடியாத நேரங்களில், ஒரு கணவன் உடலுக்கு மருந்து கொடுக்கிறானோ இல்லையோ, அவள் மனதுக்கும் மருந்தாக இருக்க வேண்டும். அவளின் சின்ன சின்ன வெற்றிகளில் கூட, ஆதரவாக நின்றால், இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வெறி அவளுக்குள் பிறக்கும். எக்காரணத்தை கொண்டும், விட்டுக்கொடுத்து மட்டும் பேசவே கூடாது. நீங்கள் மட்டுமே உலகம் என்று நம்பி வாழும் ஜீவன் அவள். நீங்களே அவளுக்கு பாரமாக மாறிவிடக்கூடாது.

husband wife life

சில நேரங்களில் பாசம் குறையலாம், அதை மறைக்க வேஷம் போடக்கூடாது. சமையல் சுமாராக இருந்தாலும், அருமை அருமை என்று சொல்லி அன்பு பாராட்ட வேண்டும். யோசிச்சு பாருங்க! நம்ம அம்மா கூட, ஆரம்பத்தில் கல்யாணமாகி வந்த புதிதில் இப்படித்தான் இருந்துருப்பாங்க. போகப்போக பழகியிருச்சுல, அந்த மாதிரி தான். இறுதியாக உங்களுக்கு பாட்டுப்பாட தெரியும் என்றால், நீ தினம் சிரிச்சா போதுமே.. வேற எதுவும் வேண்டாமே.. என்று பாடி பாருங்கள். அடி விழாமல் இருந்தால், அடுத்த பதிவில் பார்க்கலாம்.