Misc

பற்பல நல்ல குணம் கொண்ட கற்றாழையை வீட்டின் முன் வளர்த்தால் ஆபத்து வருமா ? தெரிந்துகொள்ளுங்கள்

Mar 01 2021 09:49:00 AM

        பொதுவாக நம் முன்னோர்கள் கூற இதை கேள்விப்பட்டிருப்போம் . கற்றாழையை வீட்டின் முன் வளர்க்க கூடாது அப்படி வளர்த்தால் நமக்கு ஆபத்து  என்று அவர்கள் கூறியதை, நாம் வீட்டிற்கு ஆகாது என்று தவறாக புரிந்து கொண்டிருக்கிறோம். பொதுவாக கற்றாழையின் சிறப்பு என்னவென்று பார்த்தோமேயானால்  நிலத்தில் இருக்க கூடிய நீரை உறிஞ்சி தன்னுள் சேமித்து வைக்க கூடிய ஆற்றல் கொண்டது.

alovera alovera-home-front

        பெரும்பாலும் இதை வறண்டநிலப் பகுதிகளில் வைத்தால் இதனுடைய வேரானது  காற்றில் இருக்க கூடிய ஈரப்பதத்தை  உறிஞ்சி அந்த இடத்தில் ஈரப்பதத்தை பேணிப்பாதுகாக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. இக்கற்றாழை நமக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது எப்படியென்றால் நம் வீட்டில் மரம் வளர்க்கும்போது அதற்கு போதுமான அளவில் தண்ணீர் ஊற்ற முடியாமல் போகும்  சூழ்நிலையில் அம்மரத்தை  சுற்றி இக்கற்றாழையை  நட்டு வைத்தால், அம்மரம் தனக்கு  தேவையான நீரை அதனிடமிருந்து எடுத்து கொள்ளும்.

alovera alovera-home-front

       இவ்வளவு சிறப்புமிக்க கற்றாழையை ஏன் வீட்டின் முன் வளர்க்க கூடாது என்பதற்கு காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள் கூறியிருக்க மாட்டார்கள்பொதுவாகவே இது புதர் போல் வளர்கின்ற தாவரமாகும். அப்படி வளரும்போது அங்கு ஒரு கதகதப்பான சூழ்நிலை ஏற்படும். இப்படி இருக்கும் நிலையில் அங்கு பூரான் பாம்பு போன்ற விஷப் பூச்சிகள் தங்கக்கூடிய வாய்ப்புண்டு. இதனால் தான் வீட்டின் முன் இதை நட்டு வைக்க கூடாது என்று கூறியிருக்கிறார்களே தவிர வேறு எந்த தவறான காரணமும் இல்லை.

alovera alovera-home-front

             அடிக்கடி சுத்தம் செய்து வருவதனால் எந்த பூச்சிகளும் அண்டுவதற்கும் வாய்ப்பு இல்லை. எனவே, மரங்களை பாதுகாப்பதற்கும் இயற்கை சம நிலையை பேணுவதற்கும் கட்டாயம் இதை நாம் வளர்க்க வேண்டும்.