Hugs & Kisses

கட்டிய புருஷன் கண்டவளோடு சகவாசம்! திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு தவிக்கும் தங்கைக்கு என்னவென்று சொல்வேன்? ச்சை! பூட்டிய வீட்டுக்குள்

May 14 2021 11:21:00 PM

நல்ல இடமா பார்த்து பெண்ணை கட்டிக்கொடுப்பதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. ஜாதகம் பார்க்க ஆரம்பிப்பதில் இருந்து, தலை கால் புரியாது. சொந்த பந்தம் கொடுக்கும் நம்பிக்கையின் பெயரில், தூரத்து உறவு முறை பையன் ஒருவனை தங்கைக்கு மணம் முடித்து வைத்தோம். கல்யாணமாகி ஒரு ஆறு மாஷம் நல்லா தான் இருந்தான். பிறகு வேதாளம் முருங்கை மரம் ஏறியாச்சு. எனக்கு தெரிய வந்த வரை, அவனுக்கு எல்லா விதமான தீய பழக்கங்களும் உண்டு.

husband sister story

கஞ்சா போ தையில் ஆரம்பித்து, பெண் சகவாசம் வரைக்கும் சகலமும் அவனிடம் இருக்கு. வெளியில் சொன்னா நாங்க கஷ்டப்படுவோமேன்னு தங்கை வெளியில் சொல்லவே இல்லை. எப்படியோ தாக்குப்பிடித்து மூன்று வருடங்கள் வாழ்ந்துவிட்டாள். இடையில் இரு குழந்தைகளும் பிறந்துவிட்டது. எப்படியும் திருந்திவிடுவான் என்ற நம்பிக்கையில், குழந்தைகளை நன்றாக பார்த்துக்கொண்டாள். 10 மாத குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லியும், பாசம் இல்லாமல் போதையில் படுத்துக்கிடந்த புருஷனை பார்த்து, மொத்தமா மனசு உடைஞ்சு போயிட்டாள்.

husband sister story

இதுக்கும் மேலும் அவனிடம் வாழ முடியாதென பிறந்த வீட்டுக்கே திரும்ப வந்து, கண்ணை கசக்கிக்கொண்டு நிற்கிறாள். எங்களால் இப்போதைக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல முடியும். முடிவெல்லாம் அவள் கையில் இருக்கு. அடுத்து இரு பிஞ்சுகளை வளர்ந்து, காலம் தள்ள வேண்டும். புருஷனை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. குழந்தைக்கு உடம்பு சரியில்லாத போது வராத பாசமா? பிரிந்த பிறகு வரப்போகிறது? இனி அவன் இருப்பதும் ஒண்ணு, இல்லாததும் ஒண்ணு.

husband sister story

புருசனுக்கு பெண்களின் சகவாசம் இருப்பதை, எந்த ஒரு பெண்ணாலும் சகித்துக்கொண்டு இருக்க முடியாது. எந்தவொரு ஆண் பெண் சகவாசத்திற்கு ஆளாகி விட்டாரோ, அவர் அதைவிட்டு வெளி வருவது என்பது மிகவும் கடினம். நாங்க தங்கச்சி புருஷனை சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. விவாகரத்துக்கும் போகவில்லை. அவளே தனியா சமாளிக்க முடியும் என்கிறாள். அவளுக்கே இந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கும் போது, நாங்க ஏதும் புத்திமதி செல்லத்தேவையில்லை. நீ எந்த முடிவு எடுத்தாலும், நாங்க உன் கூட துணை நிற்போம் என ஒரு வார்த்தை சொல்லிவிட்டோம். அந்த ஒன்றே போதும் அவளுக்கு.