Spellbound

தமிழிசை சொன்னதற்கு அன்று ரியேக்ட் செய்த அஜீத், மாஸ்க் விஷயத்தில் மவுனம் காப்பது ஏனோ? விஜய் பட்டென சொன்னது போல, தானும் உண்மையை சொல்லிவிட்டு ஒதுங்கி கொள்ளலாமே?

Apr 07 2021 10:51:00 PM

ஓட்டு போட அஜீத் சி வப்பு மற்றும் க ருப்பு நிற மாஸ்க்கை அணிந்து வந்தது, விஜய் சி வப்பு மற்றும் க ருப்பு நிற சைக்கிளில் வந்தது தான் பெரும் பேசுபொருளாக உள்ளது. இன்னும் எத்தனை நாளுக்கு இதை பற்றியே பேச போகிறார்கள்? அஜீத்தும் விஜயும் திமுகவிற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இது எல்லாம் குறியீடு தாங்க, இருவரும் பா.ஜ.கவை எதிர்க்கும் விதமாக, இப்படி நிறத்தில் தங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் மறைமுகமாக காட்டுகிறார்கள் என எத்தனை கட்டுக்கதைகள்? 

ajith election-2021

'ஏங்கய்யா வாக்குச்சாவடி ரோடு குறுகலாக உள்ளதென சைக்கிளில் போனால், எப்படியெல்லாம் நீங்களே உருவாக்கி கொண்டீர்கள்?' தான் சைக்கிளில் வந்ததற்கும் அரசியல் குறியீடு என குறிப்பிடுவதற்கு பின்னரும் எதுவும் இல்லை என விஜயே அதிகாரபூர்வமாக கூறிவிட்டார். ஆனால் அஜீத் தரப்பில் அவருடை மாஸ்க் நிறம் பற்றி கிளம்பும் ச ர்ச்சைகளுக்கு எதிராக எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாகவே உள்ளார் அஜீத்.

ajith election-2021

ஏனெனில் சில வருடங்களுக்கு முன்னாள் அஜீத் ரசிகர்கள் பா.ஜ.கவை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கிறார்கள் என தமிழசை கூறியதற்கு, உடனடியாக ரியேக்ட் செய்யும்விதமாக 'என்மீதும் என் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூச வேண்டாம்' என தன்னுடைய மேனேஜர் மூலம் கேட்டுக்கொண்டவர், 
மாஸ்க் நிற விஷயத்தில் அமைதி காப்பது ஏனோ? ஏனெனில் இன்னும் சோசியல் மீடியாவில் அஜித்தின்  சி வப்பு, க ருப்பு நிற மாஸ்க் மற்றும் விஜயின் சி வப்பு, க ருப்பு நிற சைக்கிள் தான் பெரும் பேசுபொருளாக உள்ளது. இதற்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அஜீத் எப்போதும் இதற்கு நிறுத்தற்குறியீடு இடப்போகிறாரோ?