Hugs & Kisses

கணவன் மனைவி இருவருக்கும் எத்தனை வருடம் வயது வித்தியாசம் இருக்க வேண்டும்? வயது வித்தியாசம் பார்க்காமல் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது ரொம்ப நாள் தாக்குப் பிடிக்காதாம்!

Jan 13 2022 04:38:00 PM

கல்யாணம் செய்வது எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவுக்கு தம்பதிகள் இருவருக்குமான வயது வித்தியாசமும் முக்கியம். வயது இடைவெளியை பெரிதாக நினைக்காமல் திருமணம் செய்து வைத்தால் அந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. இந்த விசயத்தில் இரண்டு உதாரணங்களை சொல்ல விரும்புகிறேன். முதலில் மிகக்குறைந்த வயது வித்தியாசம். அதாவது கணவன் மனைவி இருவருக்கும் ஒரே வயது அல்லது கணவனை விட ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் மட்டும் வயது குறைந்த மனைவி இருக்கும் சூழல்.

age-difference male-and-female

என்னுடைய உறவினர் ஒருவருக்கு நீண்ட நாட்களாக தேடியும் பெண் கிடைக்கவில்லை என்பதால் திருமணம் செய்வது மிகவும் தாமதமாகி விட்டது. கிட்டத்தட்ட 35 வயதில் தான் அவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அவருடைய மனைவிக்கு 34 வயது. இருவருக்கும் ஒரு வருட இடைவெளி மட்டுமே. இதனால் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டாலும் அடிக்கடி ச ண்டைகளும் வந்து கொண்டு தான் இருந்தது. இருவரும் ஒரே வயதில் இருப்பதால் ச ண்டை வரும் நேரத்தில் இருவருமே விட்டுக்கொடுத்து போவதில்லை. எனவே மிகக்குறைந்த வயது இடைவெளி அல்லது ஒரே வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் அவர்கள் விவாகரத்து வாங்காமல் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

age-difference male-and-female

இரண்டாவதாக சொல்லப்போவது மிக அதிக வயது வித்தியாசம். இதற்கு வெளியில் எல்லாம் உதாரணம் சொல்லத்தேவையில்லை. உங்கள் வீட்டிலேயே உதாரணம் சொல்லலாம். இந்தக்காலத்து இளைஞர்களின் பெற்றோர் பலருக்கும் வயது இடைவெளி அதிகமாகத்தான் இருக்கும். 20 முதல் 30 வயதுக்குள் பையன் அல்லது பெண் இருக்கும் வீட்டில் அவர்களுடைய பெற்றோருக்கான வயது வித்தியாசம் 10 வருடங்கள் கூட இருக்கிறது. ஒரு சில வீடுகளில் கணவன் மனைவி வயது வித்தியாசம் 15 வருடங்கள் வரை கூட இருக்கிறது. கணவனை விட மனைவிக்கு வயது ரொம்ப கம்மியாக இருப்பது அந்தக்காலத்தில் பெரிய பிரச்சனையாக கருத்தப்படவில்லை. மேலும் பொண்டாட்டிக்கு வயது கம்மியாக இருந்தால் தான் தடி ஊன்றி நடக்கும் காலத்தில் அவள் கணவனை கவனித்துக்கொள்ள முடியும் என்று நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் சொல்லுவாங்க. இருப்பினும் இந்தக்காலத்துக்கு இவ்வளவு வயது வித்தியாசத்தில் கல்யாணம் பண்ணுவது செட் ஆகாது.

age-difference male-and-female

அப்ப எவ்வளவு வருட இடைவெளி இருக்க வேண்டும்? குறைந்தது மூன்று வருடம் முதல் அதிகபட்சம் 5 வருட இடைவெளியில் ஆண் மற்றும் பெண் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம். மிக அதிகபட்சம் என்று எடுத்துக்கொண்டால் ஒரு ஏழு வருட இடைவெளி வைத்துக்கொள்ளலாம். 30 வயது ஆணுக்கு திருமணம் செய்ய 23 வயதுக்கு கீழே இருக்கும் பெண்களை தேர்ந்தெடுப்பது சரியில்லை. எனவே தம்பதிகள் இருவருக்குமான வயது வித்தியாசம் 3 முதல் 7 வருடங்களுக்குள் இருக்கலாம் என்பது இந்தக்காலத்துக்கு ஏற்றதாக இருக்கும். உங்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றால் வயது இடைவெளிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரன் தேடுங்கள். ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தால் உங்களுடைய வயது வித்தியாசம் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த அனுபவங்களை பகிருங்கள்.