Spellbound

கதை சொல்ல வருபவர்களை தனியாக காபி ஷாப்புக்கு அழைக்கும் பிரியா பவானிஷங்கர்! அதுக்குன்னு அதைக்கூடவா போடாமல் போவாங்க? லாக்டவுனில் கசிந்த இரகசியம்!

Sep 15 2020 10:47:00 PM

இந்த லாக்-டவுன் போட்டது நடிகர், நடிகைகளுக்கு நல்லா வசதியா போச்சு. இதற்கு முன்னர் கதை கேட்க வேண்டும் என்றால், கால்ஷீட்டில் கமிட் ஆனதை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கேட்க வேண்டி இருக்கும். இப்போ தான் முழு நேரமும், ஃபிரீ ஆச்சே, சகட்டு மேனிக்கு கதை கேட்டுத்தள்ளுறாங்க. நல்லா கதையா பார்த்து நடித்து, காலத்துக்குள் பெயர் சொல்லும் அளவுக்கு ஹிட் கொடுக்க வேண்டும் என்பதே, பல வளர்ந்து வரும் நடிகர்களின் கனவாகும்.

priya-bhavani-shankar actress-priya movie

சிவக்கார்த்திகேயன் இதுவரைக்கும் மூன்று கதை கேட்டு, அதில் ஒன்றில் நடிக்க லைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தமும் உறுதியாகிவிட்டதாம். சிவக்கார்த்திகேயனைப் போலவே, நடிகை  பிரியா பவானி ஷங்கரும் வளர்ந்து வரும் நடிகை தான். இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்று பார்த்தால், இருவருமே தொலைக்காட்சியில் பணிபுரிந்து, அதிலிருந்து சினிமா துறைக்குள் நுழைந்தவர்கள். எப்படியாவது சினிமாவில் பெரிய அளவில் ஜெயிக்க வேண்டும் என்ற வெறி இருக்கும்.

priya-bhavani-shankar actress-priya movie

மற்ற நடிகர், நடிகைகளுக்கு, அடுத்தடுத்த படங்களில் நடிப்பது, ஒரு புரோஜெக்ட் மாதிரியான அனுபவத்தை கொடுக்கும். சிவக்கார்த்திகேயன், பிரியாபவானி சங்கர் போன்றோருக்கு, அடுத்தடுத்து நடிப்பது வாழ்நாள் சாதனையாக இருக்கும். அதற்காகத் தான் கதை தேர்வு விஷயத்தில், இருவருமே ரொம்ப ஸ்ட்ரிக்ட். லாக்-டவுன் போட்டதில் இருந்து, யார் கதை சொல்ல அழைத்தாலும், ஒருமுறை கூட பிரியாபவானி சங்கர் மறுத்ததே கிடையாதாம்.

priya-bhavani-shankar actress-priya movie

நேரா காபி ஷாப்புக்கு வர சொல்லி விடுவாராம். ஒரு மணி நேரம் ஆனாலும், உட்கார்ந்து முழு கதையையும் உள்வாங்கிக்கொண்டு, பிடித்திருந்தால் அடுத்த கட்ட முடிவை எடுத்துவிட்டு அழைப்பதாக உறுதிவாக்கு கொடுக்கிறார். இடையில் ஒரு முறை, கதை கேட்கும் ஆர்வத்தில், மாஸ்க் கூட போடாமல் வெளியில் கிளம்பி, கையும் களவுமாக சிக்கியிருக்கிறார். அதற்கு பிறகு உஷாராகி, மீண்டும் கூப்பிட்ட உடனே வெளியே கிளம்பி வந்துவிடுகிறாராம். மற்ற நடிகைகளை ஒப்பிடும் போது, பிரியாவிடம் கதை சொல்ல ரொம்பவும் எளிதாக இருப்பதோடு, சொல்ல வந்ததை முழுமையாக சொல்லவும் முடிகிறதென இயக்குனர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.