Spellbound

#WoW: உங்களால் நம்ப முடிகிறதா? விவசாயம் செய்யும் 5 நடிகர்கள்!

Mar 20 2020

உங்களுக்கு பிடித்த நடிகர்கள் காதல், சண்டை, நடனம், உங்களை சிரிக்க வைப்பது மற்றும் இன்னும் பலவற்றை செய்வதை தான் நீங்கள் பார்த்துள்ளீர்கள். அவர்கள் விவசாயம் செய்து பார்த்ததுண்டா.? அப்படிப்பட்ட சில நடிகர்களின் விவரங்களை அடுத்து பார்க்கலாம்.

#1. மாதவன் - அழகிய தோற்றத்தால் புகழ்பெற்ற மாதவன், மும்பையில் உள்ள தனது வீட்டில் ஒரு அழகான மொட்டை மாடி தோட்டத்தை வைத்திருக்கிறார். சைவ உணவை நம்புவதோடு, ட்விட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். அவரது மொட்டை மாடி பண்ணை மற்றும் உள்நாட்டு காய்கறிகளின் நிறைய வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

#2. நவாஸுதீன் சித்திக் - தமிழில் சூப்பர்ஸ்டாரின் "பேட்ட" படத்தில் வில்லனாக நடித்திருப்பார். உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.இவர் தனது விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் தனது கிராமத்துக்கு சென்று அங்கு விவசாயத்தில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் பொழுதை களிப்பதாக கூறியிருக்கின்றார்.

#3. பவன் கல்யாண் - "நான் ஒரு நடிகராக இல்லாதிருந்தால் கண்டிப்பாக விவசாயியாக இருந்திருப்பேன் " என்று கூறியிருக்கிறார். தனது சொந்த பண்ணை வீட்டில் பல நாட்கள் விவசாயம் செய்து தனது ஓய்வு நேரத்தை கழித்திருக்கிறார்.

#4. பிரகாஷ்ராஜ் - விவசாயத்தில் பல நவீன சாகுபடி முறைகளை செயல்படுத்தி இருக்கிறார். தனது சொந்த பண்ணையில் விஞ்ஞான விவசாய நுட்பங்களை பரிசோதித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

#5. மம்முட்டி - கேரளாவில் மிகப்பெரிய நெல் வயல்களை கொண்டிருக்கும் அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தனது பண்ணையில் வேலை செய்வதாக தெரிவித்திருக்கின்றார். 

#WoW: இதில் ஒரு சிலர் பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். சினிமா துறைக்குள் வந்தாலும், விவசாயத்தை மறந்துவிடக்கூடாது என்று அதில் ஈடுபட்டு வருகின்றனர்.

Top