Spellbound

#Vijay: நடிகர் விஜய் இந்த அளவுக்கு பிரபலமடைய ரஜினி தான் காரணமா? அப்பவே தளபதி செய்த தில்லாலங்கடி வேலை!

Jul 31 2020

எனக்கு தெரிந்து போக்கிரி படம் வரைக்கும் நடிகர் விஜயின் முகம் வேறு விதமாக இருந்தது. போக்கிரி பாடத்திற்கு பிறகு, ஒரு மாதிரியான விஜய் நடிப்பை காண முடிகிறது. ஆரம்பத்தில் நடித்த படங்களில் எல்லாமே சறுக்கல் தானாம். எப்படியாவது தன் மகனை ஒரு வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று, சந்திரசேகர் எவ்வளவோ முயற்சி செய்துபார்த்திருக்கிறார், காலம் கை கூடி வரவில்லை. மக்களும் அப்போதைய விஜயின் நடிப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

vijay rajini tamil-cinema

அந்த நேரத்தில் ரஜினி தமிழ் திரை உலகின் உச்சத்தில் இருந்தார். பார்த்த வரைக்கும் பார்த்த விஜய், இறுதியாக ரஜினி பாணியை கையிலெடுத்து, பிறகு வந்த படங்களில் எல்லாம், ரஜினியின் பெயர், பட காட்சிகள், பஞ்ச் வசனங்களை பயன்படுத்தி ரஜினியின் புகழ் பாடினார். இது போக்கிரி படம் வரைக்கும் நடந்தது. அதிலிருந்து ஒரு பாதை கிடைத்ததால், பிறகு தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டார். அது வரை ரஜினி என்ற அடையாளம், ஒவ்வொரு படத்திலும் தேவைப்பட்டிருக்கிறது.

vijay rajini tamil-cinema

காரணம், அன்றைய சூழ்நிலையில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத மாஸ் ரஜினுக்கு மட்டுமே இருந்தது. தியேட்டரில் ரஜினி படத்தையோ, போஸ்டரையோ காட்டினால் கூட விசில் பறக்கும். அதனாலேயே ஆரம்பத்தில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொள்ளவும், தன்னை ஒரு பிராண்ட்டாக முன்னிறுத்திக்கொள்ளவும் நடிகர் விஜய், ரஜினி புகழ் பாடியதோடு, தன்னை ரஜினி ரசிகராகவும் முன்னிறுத்திக்கொண்டார். இந்த வழக்கம் விஜயோடு மட்டும் நின்றுவிடவில்லை.

vijay rajini tamil-cinema

தற்போதைய காலகட்டத்தில் ராகவா லாரன்ஸ், நடிகர் சிவகார்த்திகேயன் போன்றவர்களும் கூட, தங்களை ஒவ்வொரு மேடையிலும் ரஜினி ரசிகராகவே முன்னிறுத்திக்கொள்கின்றனர். ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஸ்டைல் இருந்தால் தான், சினிமாவில் நிலைக்க முடியும் என்று சொல்வார்கள். அந்த ஸ்டைல் வரும் வரைக்கும், பல நடிகர்களுக்கு ரஜினி என்ற அடையாளம் தேவைப்பட்டுள்ளது. இப்படி மூன்று தலைமுறை கடந்தும், பேன்ஸ் பேஸ் குறையாமல் இருக்கிறது என்றால், திரைதுறைக்கு ரஜினி இந்த நூற்றாண்டு கண்ட அதிசயம்.