Spellbound

கவுண்டமணி-செந்திலை ந சுக்கியது நடிகர் வடிவேலா? தமிழ் சினிமாவில் இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சு கூட பார்க்க முடியல!

Sep 14 2020 07:44:00 PM

தலைவன் வடிவேலு இல்லையெனில் இன்று தமிழ் 'மீம்ஸ்களே' இல்லை. இன்றைய சினிமாவில் அவர் அதிகம் நடிக்காவிட்டாலும்., மீம்ஸ் மூலம் நம்மை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அவர் வசனங்கள் நம்மை நகைச்சுவையோடு பயணிக்கச் செய்கின்றன. வடிவேலுவின் நடிப்பில் இரட்டை அர்த்த நகைச்சுவை, மற்றவர்களை ஒப்பிட்டால் மிகவும் குறைவே. மற்றவர்களின் உடல் அமைப்பை, குறிப்பாக பெண்களை ஏளனப்படுத்துவதையே நகைச்சுவை என்று சொல்லும் இன்றைய திரை உலகில், வடிவேலு தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்பு நடை மற்றும் முக பாவனையில் தமிழ் சினிமாவில் தனி முத்திரையை பதித்தவர்.

vadivelu comedy gowndamani

ஒரு வரம்புக்கு மேல் அடுத்தவரை ஏளனம் செய்யாத, தன்னைத்தானே மிக வருத்திக்கொண்டு நடித்த ஒரு அருமையான கலைஞன். அவரது இயல்பான மதுரை வழக்கு பேச்சும், உடல்மொழியும் ஒன்றே போதுமே. நடிக்கும் கதாபாத்திரமாகவே மாறிவிடுவார்.உதாரணத்திற்கு, ஒரு படத்தில் வரும் வெட்டியான் கதாபாத்திரம். அது போல இன்னும் பல இருக்கு. வடிவேலு செய்த ஒன்றிரண்டு காமெடிகளில் சிரிப்பு சற்று குறைவாக வேண்டுமானால் இருந்திருக்கலாம், ஆனால் ஆபாசம் என்பது துளியும் கிடையாது.

vadivelu comedy gowndamani

இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களின் நகைச்சுவை என்பது ஒருவரை இழிவாக பேசுவது தான். உதாரணத்திற்கு "நெளிந்த டப்பா மூஞ்சி, ஆமை ஆய்போற மாதிரி உக்கார்திருக்கான்" இது போலத்தான் வசனங்கள் இருக்கும். சார்லி சாப்ளின், நடிகர் நாகேஷ் காலத்திற்கு பிறகு தன்னை தாழ்த்திக்கொண்டு பிறரை சிரிக்க வைத்தவர் வடிவேலு. கவுண்டமணி-செந்தில் காமெடிக்கு பிறகு, வடிவேலு, விவேக் என்று இருவர் பிரபலம் ஆனார்கள். அதே போல சூரி, சந்தானம் போன்றோர் தற்போது பிரபலம் ஆனார்கள். அடுத்து யோகி பாபு.

vadivelu comedy gowndamani

இது போல ஒருவருக்கு அடுத்து ஒருவர் வருவார்களே தவிர, அவர்களுக்கு மாற்றாக இன்னொருவரை சினிமாவில் என்றைக்கும் பார்க்க முடியாது. இதில் வடிவேலு ஒரு சகாப்தம். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தி. கருப்பு நாகேஷ் என்ற பட்டம் சும்மா வந்துவிடவில்லை. வடிவேலு காமெடிகளை குடும்பத்தோடு ரசிக்கலாம். விரசமில்லா நகைச்சுவைக்கு வைகை புயலுக்கு ஈடு இணையாக இப்போதைக்கு யாரையுமே காணோம். எல்லாம் டபுள் மீனிங்கில் ஊறிக்கிடக்கு.