Spellbound

ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக பட ப்ரோமோஷன்களை அவாய்ட் செய்யும் பிரபலம்! நண்பர்கள் மத்தியில் கசியவிட்ட உண்மை!

Aug 04 2021 08:27:00 PM

சில நடிகர், நடிகைகள் பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்ளாமல் இருக்க பல காரணம் சொல்லப்படுகிறது. நயன்தாரா, அஜித் போன்ற பிரபலங்கள் பட ப்ரோமோஷன்களில் பங்கேற்காமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் அடுத்தடுத்து படங்களில் பிசியாகி இருப்பதால் இது போன்ற பட ப்ரோமோஷன்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. ஆனால் நடிகர் ஜெய் பெரும்பாலான பட ப்ரோமோஷன்களில் பங்கேற்காமல் இருக்க, வித்தியாசமான காரணம் சொல்லப்படுகிறது. 

actor-jai anjali

ஒருமுறை தன்னுடைய நண்பர்களுடன் இது குறித்து பகிர்ந்து கொண்ட ஜெய், தனக்கு ஆங்கிலம் சரளமாக வராத காரணத்தால் தான், பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என கூறியுள்ளார். மேலும் அங்குள்ள பத்திரிக்கையாளர்கள் யாரேனும் ஆங்கிலத்தில் உரையாடினாலோ அல்லது கேள்விகள் கேட்டாலோ, தன்னால் சரளமாக ஆங்கிலத்தில் பதில் அளிக்க முடியாத காரணத்தால் தான், எந்த பட ப்ரோமோஷன்களிலும் கலந்துகொள்வதில்லை என கூறியுள்ளார். 

actor-jai anjali

இந்த விஷயத்தில் நடிகர் விஜயகாந்த் தான் நினைவிற்கு வருகிறார். இவர் தான் கலந்துகொள்ளும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யாரேனும் ஆங்கிலத்தில் கேள்விகேட்டால், 'தமிழில் கேளுங்க' என நாகரீகமாகவே கூறுவார். இந்த இடத்தில் விஜய்காந்த்திற்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று யாரேனும் கேலிக்கை செய்வார்கள் என்பதை காட்டிலும், நாலு பேர் மத்தியில் தமிழில் கேளுங்க என சொல்லவே ஒரு தைரியம் வேண்டும் என்பது தான் பெரிதாக தெரியும். தமிழ்நாட்டில் வாழ்கிறோம், தமிழ் படத்தில் தான் நடிக்கிறோம், ஆங்கிலம் பேச வேண்டும் என்ற தேவை எங்கு வந்தது? ஆங்கிலத்தில் பேசாமல் இருப்பதை கவுரவ குறைச்சலாக பார்ப்பதை யார் உருவாக்கினார்கள்? இதுபோன்ற கேள்விகளை உடைப்பது விஜயகாந்த் போன்ற பிரபலங்கள் பொதுவெளியில் நெத்தியடியாக 'தமிழில் பேசு' என பதில் சொல்வது தான்.

actor-jai anjali

விஜயகாந்த் போலவே ஜெய் தான் போகும் இடத்தில் யாராவது ஆங்கிலத்தில் உரையாடும்போது, தமிழில் பேசுங்க என கூறியிருந்தால், கண்டிப்பாக ஜெய் ஒரே நாளில் உச்சத்திற்கு சென்றிருப்பார். ஊடகங்களும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியிருக்கும். மாறாக பட ப்ரோமோஷன்களில் கலந்துகொள்வதை தவிர்த்து வருவது அவரது இமேஜை மேலும் இறக்கி கொண்டே தான் இருக்கும்.