Spellbound

தற்போதைய தமிழ் நடிகர்களில் திறன் இருந்தும் கண்டுகொள்ளப்படாத நடிகர்கள்!

Feb 10 2020

ஒரு சில தெலுங்கு படத்தையெல்லாம் பார்க்கும் போது "இந்த நடிகருக்கு என்ன திறமை இருக்கிறது.? தொடர்ச்சியாக வாய்ப்பு வருகிறதே" என்று நினைக்க தோன்றும். இதுவே தமிழ் சினிமாவில் "இவருக்கு என்ன குறைச்சல், இத்தனை திறமை இருந்தும் வாய்ப்பு வர மாட்டங்குதே" என்று நினைக்க தோன்றும். அப்படியான சில நடிகர்களின் லிஸ்ட்டை அடுத்து பார்ப்போம்.

#1. மாதவன் - இவர் தொட்டதெல்லாம் நல்லாதான் இருக்கிறது. ஆனால் பட வாய்ப்புகள் ஒன்றும் பிரகாசமா இல்லையே. சில சுமாரான நடிகர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பில் பாதி கூட, இப்படி ஒரு சிறந்த நடிகருக்கு கிடைக்கவில்லை. இவருக்கு என்ன கொறச்சல்.? அழகு இல்லையா.? உடம்பு இல்லையா.? முக்கியமாக நடிப்பு இல்லையா.? விக்ரம் வேதா படத்திற்குப் பிறகு, பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படம் வெளியாகாதது வருத்தமே.

#2. விதார்த் - ஒரு சில படங்களில் வந்து போனாலும், அபாரனமான நடிப்பு திறனை வெளிப்படுத்த கூடியவர். மைனா படத்தில் போட்ட ஆட்டத்தை சொல்லவா வேணும்.? அப்படி இருந்தும் பெரிய அளவில் வாய்ப்புகள் வராமல், அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

 

#3. குரு சோமசுந்தரம் - ஜோக்கர் படத்தில் நம்மை அழ வைத்திருப்பார். அப்படம் தேசிய விருது வாங்கியிருந்தாலும், அவரைத்தான் யாரும் கண்டுகொள்ளவில்லை. சிறந்த தோற்றம் இல்லாததுக்கோ என்னவோ. ஆனால் நடிப்பில் ஒருபோதும் குறைந்தவரில்லை.

#4. வைகைப்புயல் வடிவேலு - இவர்தான் மீம்களின் கடவுளாக பார்க்கப்படுகிறாரே, இன்னும் எதற்கு வாய்ப்பு வேண்டும் என்று ஒருபோதும் நினைத்துவிட வேண்டாம். அவருடைய பழைய படைப்புகள் நமக்கு போதாது. வடிவேலு நடிப்பில் இன்னும் நிறைய புது படங்கள் எல்லோருக்கும் தேவை.

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top