Misc

#JungleJalebiPlant: வீட்டில் கொடுக்கா புளிமரம் வளர்க்க கூடாது என்கிறார்களே ஏன்? வளர்த்தால் என்னவாகும்?

Jun 02 2020 04:06:00 PM

கொடுக்கா புளிமரம், கொறுக்கா புளிமரம், கோணபுளியங்காய் என பல பெயர்களை கொண்ட இதனை சில மாதங்களுக்கு முன்னர் சூப்பர் மார்கெட்டில் பார்த்த போது ஆச்சர்யம், பாக்கெட் 50 ரூபாய். பள்ளி செல்லும் வழியில் ஒரு வீட்டில் கொடுக்கா புளிமரம் இருக்கும். பாதி மரம் வீட்டிற்குள் இருந்தாலும், மீதி மரத்திலிருந்து கோணபுளியங்கா வீதி முழுக்க கொட்டி கிடக்கும். அதை பச்சையாக உண்ணும் போது இனிப்பு கலந்த அதன் சுவை தொண்டையை அடைக்கும். சிவப்பு நிறக்காயாக இருந்தால், அணில்கள் அவற்றை பதம் பார்த்த பின்னர் அதுவே கீழே விழும். அதன் சுவை அலாதியானது. 

Jungle-Jalebi-Plant 90skids

சீசன் இல்லாத போது. ஒன்றிரண்டு மரத்தில் தொங்கும். எப்போது விழும் என பார்த்து கொண்டிருக்க, நமக்கு முன்னரே யாரவது வந்து பறித்துவிட்டு போயிருப்பார்கள். இதை பறிக்கவே சிறப்பாக ஒரு ஆயுதம் தயார் செய்ய வேண்டும். நீளமான கம்பு அதன் முனையில் சிறு அரிவாள் போன்ற ஒன்றை கட்டி பறிக்க வேண்டும். சமீபத்தில் ஊருக்கு சென்ற போது, அந்த மரம் அங்கு இல்லை வெட்டிவிட்டார்கள். ஏன் வெட்டி விட்டார்கள் என விசாரித்த போது, இடத்தை அடைத்து கொண்டு இருப்பதாலும் இதனது சிறு இலைகளால் குப்பை சேர்ந்து கொண்டே இருப்பதாலும் வெட்டி விட்டதாக தகவல் வந்தது.  

Jungle-Jalebi-Plant 90skids

விசாலமாக பரவும் கிளைகளை உடைய மரம் என்பதால், வீட்டில் வளர்ப்பதற்கு இடம் போதுமானதாக இருக்காது. கிளை பக்கத்து வீட்டு காம்பவுண்டில் சற்று எட்டி பார்த்தாலும், பக்கத்து வீட்டுக்காரன்  சண்டைக்கு வந்துவிடுவார்கள். காடு எனில் எந்த பிரச்சனையும் இல்லை. வீட்டில் வளர்க்க ஆசைப்பட்டால், பக்கத்து வீட்டுக்காரன் பிரச்சனை வரும் என்ற பயத்திலே வளர்க்க வேண்டும் அவ்வளவுதான். மற்ற படி வீட்டில் வளர்க்க கூடாத மரம் என சொல்வதெல்லாம் உண்மை அன்று.

Jungle-Jalebi-Plant 90skids

ஒரு காலத்தில் தெரு முழுக்க, பாதைகளில் கொட்டி கிடந்த கொடுக்கா புளியை காசு கொடுத்து வாங்கி உண்பேன் என நினைத்து கூட பாரக்கவில்லை அது வளர எத்தனை வருடம் எடுத்திருக்கும்? நாம்  இல்லாமல் மரம் இருக்கும். மரம் இல்லாமல் நம்மால் இருக்க முடியுமா? என இப்படி பல கேள்விகள் மரம் வெட்டப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் என்னுள் எழுந்தது.