Around me

Sevvey Travels உலகின் மிக ஆ பத்தான இடம் Poveglia தீவு

Nov 22 2020 12:06:00 AM

இத்தாலியின் அழகான வெனிஸ், ரொமான்ஸ்க்கு புகழ் பெற்றது! ஆனால், அதன் அருகிலிருக்கும் Poveglia தீவோ அமானுஷயத்துக்குப் பேர் போனது. 

haunted poveglia mayaநயன்தாரா நடித்த மாயா படத்தில், முதுகெலும்பை உறைய வைக்கும் அந்தப் பேய்க் காட்சிகள் ஞாபகம் இருக்கிறதா ? 

haunted poveglia mayaஒரு மனநல மருத்துவமனை இருந்த இடம்பேய்களின் பூமியாக இருக்கும். அந்தத் திரைக்கதைக்கூட இந்த பேய் தீவின் ஒரிஜினல் கதையில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கலாம்! ஆம், அங்கே மனநலம் சரியில்லாதவர்களைடிரீட்மென்ட்என்கிற பெயரில் டாக்டர்கள் கொன்று குவித்த நிலம் அது. 

haunted poveglia maya 

அதற்கு முன்னாலேயே அது பேய் தீவு என்றழைக்கப்பட்டுதான் வந்தது. காரணம், ஐரோப்பாயில் பிளேக் நோய் மிகக் கொடூரமாக தாக்கியபோது, அப்படி பிளேக் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களை இந்தத் தீவுக்கும் கொண்டுபோய், உயிரோடு புதைத்த கொடிய வரலாறு கொண்ட மண் இது. 

haunted poveglia maya 

தவிர, போர் எதிரிகளை அங்கே கொண்டு போய் குரூரமாக கொடுமைப்படுத்தி சாகடித்த இடமும் கூட. இந்த சிறிய தீவில், நிலம் எத்தனை சதுர அடியோ அத்தனை எண்ணிக்கைக்கு மேல் மனிதர்கள் இங்கு கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிற வரலாறு உண்டு.

haunted poveglia maya 

அவர்களின் ஆத்மாக்கள் அங்கேயே சுற்றிக் கொண்டிருப்பதால், திடீர் திடீரென அந்தத் தீவில் சப்தங்கள், அலறர்கள், அங்கே போகிறவர்கள் உயிரோடு திரும்புவதில்லை என்கிற பயங்கர நிலை ஏற்பட்டது!!

haunted poveglia maya 

'இந்தக் தீவில் கொடூரமாக சாகடிக்கப்பட்ட மனிதர்களின் ஆவிகள்தான் அங்கே போகிறவர்களைக் கொன்றுவிட்டன' என்று பலமாக மக்கள் நம்புவதால், 'இந்தத் தீவிற்குள் மனிதர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Pic Courtesy:pinterest