HotPicks

எல்லா நகை வியாபாரியும் கலப்படம் பண்ணுவாங்கனு சொல்ல முடியுமா? கேரள முதலைகளால், தமிழகத்தின் பிரபல நகை கடைக்கு வைக்கப்படும் டார்கெட்!

Apr 05 2021 03:20:00 PM

தமிழகத்தில் எத்தனையோ நகைக்கடைகள் இருந்தாலும், மொத்த வியாபாரத்தில் கோலோச்சுவது, பெரும்பாலும் கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நகைக்கடைகள் தான். தமிழக நகைக்கடைகள் ஏதாவது வளர்வது தெரிந்தால், அவர்களின் தரத்தை இறக்குவது போல விளம்பரம் செய்து, முன்னேற முடியாமல் தடுத்து விடுகின்றனர். அவர்களின் தற்போதைய லிஸ்டில், மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும், தங்கமயில் ஜுவெல்லர்ஸ் நிறுவனம் இடம்பெற்றுள்ளது.

gold gold-chain gold-rate thanga-mayil

அங்கே தங்கம் தரமாக இருக்காது என்ற போலி செய்தி உருவாக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பரப்பப்பட்டுள்ளது. எந்த நிறுவனமாக இருந்தாலும், அவ்வப்போது சிறு தவறுகள் நிகழத்தான் செய்யும். அதனை ஊதி பெரிதாக்கும் வேலையை, போட்டி நிறுவனங்கள் கட்சிதமாக செய்து வருகின்றன. என்னை பொறுத்தவரையில், தங்கமயில் நகைக்கடையில் தரம், அதன் தயாரிப்பு, நிர்வாகத்தின் கட்டமைப்பு, மிக நேர்த்தியானது. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனங்களில், மிக வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாகும்.

gold gold-chain gold-rate thanga-mayil

கடந்த வருடம் செய் கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்க எண்ணினேன். பல கடைகள் ஏறி இறங்கிய பின்னர், தங்க மயிலில் பணத்தை கட்டி விட்டு 10 மாதம் கழித்து செய் கூலி, சேதாரம் இல்லாமல் நகை வாங்கினேன். தங்கமயில் நம்பகமான லாபத்தில் இயங்கும் வரையறுக்கப்பட்ட கம்பெனியாகும். பணத்தை கட்டி விட்டு அன்றைய தேதியின் மதிப்பில் செய் கூலி, சேதாரம் இல்லாமல் எத்தனை கிராமோ , அதனை பத்து மாதம் கழித்து எந்த கிளையிலும் நகைகளை வாங்கிக் கொள்ளும் வசதி உள்ளது.

gold gold-chain gold-rate thanga-mayil

சின்ன ஊர்களில் உள்ள கிளையில் விரும்பிய டிசைன் இல்லையென்றால், கிடைக்கும் கிளையில் நகைகளை வாங்கிக் கொள்ளலாம். டிசைன் ஆர்டர் கொடுத்து செய்தும் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு. ஆகையால்தான் நான் தங்க மயிலில் நகை வாங்கினேன். வளர்ந்து வரும் நிறுவனத்திற்கும் அவப்பெயர் நேரிடுவதற்கு, நாமே முன்னுதாரனமாக இருந்து விடக்கூடாது. நிறைய தமிழக நிறுவனங்கள் இது போல தொழில் போட்டி விளம்பரத்தால் வீழ்ந்துள்ளன. நம்ம ஊர் தொழில் முனைவோருக்கு நாமே ஆதரவு கொடுக்காவிட்டால், வேறு யார் கொடுப்பாங்க சொல்லுங்க.