Spellbound

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக இருந்து, திடீரென காணாமல் போன நடிகைகள்!

Feb 11 2020

தமிழ் திரைத்துறையில் பிரபலமாக இருந்து திடீரென காணாமல் போகும் நாயகனை விட நாயகிகள் மிக அதிகம். அதில் இணையத்தில் பிரபலமான 3 நடிகைகள் குறித்த பட்டியலை பார்க்கலாம்.

#1. பாண்டவர் பூமி ஷமிதா - பாண்டவர் பூமி படத்துக்கு பிறகு இருக்கிற இடமே தெரியாமல் போன ஷமிதா, சின்னத்திரையில் இப்போதும் பிஸியான நடிகையாக உள்ளார். இவர் நடித்த மெகா சீரியல்கள் புகுந்த வீடு, பொன்னூஞ்சல், பிள்ளை நிலா, சிவசக்தி ஹிட் லிஸ்டில் இருக்கு. இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் "மௌன ராகம்" நாடகத்தின் வில்லியும் இவர் தானாம்.

#2. மானு - "காதல் மன்னன்" படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்தவர். படம்  மிகப்பெரிய வெற்றி கண்டாலும், அதன் பிறகு திரை துறையில் நாட்டமில்லாமல் வேறு துறைக்கு சென்று விட்டார்.

#3. ரிச்சா -தமிழில் இரண்டு படங்களில் நடித்துள்ளார். தனுஷுடன் இவர் நடித்த "மயக்கம் என்ன", அதற்கு பின் சிம்புவுடன் நடித்த "ஒஸ்தி" ஆகிய படங்களில் நடித்த போதிலும், அவை  தோல்விஅடைந்ததால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். கடைசியாக அக்டோபர் 2013க்கு பிறகு திரைப்படத் துறையை விட்டு வெளியேறி, தனது எம்.பி.ஏ படிப்பைத் தொடரவும், வணிக நிர்வாகத்தில் கவனம் செலுத்தவும் அமெரிக்காவுக்குச் சென்று விட்டார்.

இப்படி பல நடிகைகள் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்தும், படங்கள் தோல்வி அடைந்த ஒரே காரணத்துக்காக தொடர்ந்து நிலைத்து நின்று போராடாமல் திரைத்துறையை விட்டு விலகி சென்றது வருத்தமே. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top