Misc

கழுத்தில் ருத்ராட்சம் அணிபவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாதா? கண்ணை உறுத்தி உறுத்தி பார்த்த கூட்டம்! நோக்கமற்று அணிவது அர்த்தமில்லாதது!

May 14 2021 03:52:00 PM

ருத்திராட்சம் என்பது அடிப்படையில் ஒரு மரத்தின் விதையாகும். ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள், இதனை கழுத்தில் அணிந்து கொள்ளும் போது, நம்பிக்கையான உணர்வு ஏற்படுகிறது. முதல் முறையாக புதிதாக, புதிய உருத்திராட்சம் அணியும் பொழுது, 24 மணி நேரம் பசு நெய்யில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர், 24 மணி நேரம் பசும் பாலில் ஊற வைக்க வேண்டும். பின்னர் தூய தண்ணீரில் கழுவி துணி வைத்து துடைத்து அணியலாம். இப்படி முறையாக பதப்படுத்தி அணிந்தால் மட்டுமே, ரொம்ப நாட்கள் உடையாது நீடித்து உழைக்கும்.

god rudatcha tamilnadu

உடைந்த ருத்திராட்சத்தை பயன்படுத்த கூடாது. அது எதிர்மறை பிராண சக்தியை உண்டு செய்யும்.  ஆறு, குளம், கடல் எதிலாவது உடைந்த ருத்திராட்சத்தை போட்டுவிடுங்கள். முறையாக பாராமரித்தால் எளிதில் உடையாது. கழுத்தில் ஒரே ஒரு ருத்திராட்சம் மணி தான் பயன்படுத்துகிறீர்கள். அதுவும் உடைந்திருந்தால் புதிதாக வாங்கி கொள்ளுங்கள். பல உருத்திராட்சங்களை கொண்டு மாலையாக அணிந்திருப்பின்,  உடைந்த உருத்திராட்ச மணிகளை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு குறைந்தபட்சம் 84 மணிகள், மேலும் ஒரு உருத்திராட்ச மணி பிந்துவாக வைத்து அணியலாம்.

god rudatcha tamilnadu

அதாவது 84 முதல் 108 வரை உருத்திராட்ச மணிகள், கூடுதலாக 1 உருத்திராட்ச மணி பிந்துவாக வைத்து அணிய வேண்டும். ருத்ராட்சம் சிவனின் அடையாளமாகும். சைவ சமயத்தின் குறியீடாக விளங்குவதால், சிவபக்தியில் உள்ள அனைவரும் அணியலாம். ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்தால் விரதங்கள் இருக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. மனதளவில் சிவனையும், ருத்ராட்சத்தையும் மதித்தால் போதும். ருத்ராட்சம் அணிவதாக இருந்தால் ஒரு நோக்கத்திற்காக அணியுங்கள்.

god rudatcha tamilnadu

உதாரணமாக, ருத்ராட்சம் இருக்கும் வரை கோபப்பட மாட்டேன் என்பது போல, ஒரு கொள்கை பிடிப்பை வைத்துக்கொள்ள வேண்டும். நோக்கமற்று அணிவது அர்த்தமில்லாதது. ஆன்மிக நம்பிக்கையின் மூலமாக உருவாகும் பிராண சக்தியை, நம்முடைய உடலில் இருந்து விரயம் ஆகாமல், அதை இருத்தி வைக்கும் தன்மை ருத்திராட்ச மணிகளுக்கு உண்டு. மதம் என்ற வரையறையை கடந்து யார் வேண்டுமானாலும் அணியலாம். இதனை அணியும் போது, கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது.